முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேஸ்புக்கில் பாலியல் தொழிலாளியாக பெண் பிரதமரின் கேலிச்சித்திரம்: கலைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

ஞாயிற்றுக்கிழமை, 5 மே 2013      உலகம்
Image Unavailable

பாங்காங்: மே, - 6 - பெண் பிரதமரை பாலியல் தொழிலாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம் வரைந்த கலைஞர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. தாய்லாந்து நாட்டின் பெண் பிரதமர் யங்லக் ஷினாவத்ரா. அழகு பதுமையான இவரை விமர்சித்து சமூக வலைதளத்தில் (பேஸ்புக்) கார்ட்டூன் வெளியானது. அதில் விபசாரியை போல அவரை சித்தரித்து இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து பிரதமரின் வக்கீல் அதற்கு காரணமான கார்ட்டூனிஸ்டு ஷாய் ரஷாவாத் மீது கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த கலைஞர் அங்குள்ள பிரபல நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஷாய் வரைந்த ஓவியத்துடன் கீழ்க்கண்ட கருத்தையும் தெரிவித்துள்ளாராம். அதாவது, 'பாலியல் தொழிலாளி உடலைத்தான் விற்கிறாள். ஆனால், யங்லக் நாட்டையே விற்கும் கொடுமையான பேய்ா என்பதே அது. ஷாய்க்கு 10 வருடங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என போலீஸ்வட்டாரம் தெரிவிக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்