முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலேசிய நாடாளுமன்றத் தேர்தல் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்

ஞாயிற்றுக்கிழமை, 5 மே 2013      உலகம்
Image Unavailable

கோலாலம்பூர், மே. - 6 - மலேசிய நாடாளுமன்றம் கடந்த மாதம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, 222 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடந்தது. இத்தேர்தலில், ஆளும் தேசிய கூட்டணியும், எதிர்க்கட்சியான மக்கள் கூட்டணியும் போட்டியிடுகின்றன. தேர்தல் பிரசாரம் ஓய்ந்த நிலையில் நேற்று ஓட்டு பதிவு நடந்தது. பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடிகளில் நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் ஆர்வத்துடன் ஓட்டு போட்டனர். மலேசியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து தேசிய கூட்டணி கட்சி கடந்த 56 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி நடத்தி வருகிறது. ஆனால், இந்த தடவை போட்டி கடுமையாக உள்ளது. இருந்தாலும் இந்த முறையும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்போம் என பதவி விலகிய பிரதமர் நஜீப் ரசாக் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியான மக்கள் கூட்டணியின் தலைவர் அன்வர் இப்ராகிம் கூறும் போது, தேசிய கூட்டணி மீது ஊழல் புகார் உள்ளது. எனவே, பொதுமக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர். எனவே, இந்த தடவை நாங்கள் வெற்றி பெறுவோம் என கூறியுள்ளார். எனவே, மலேசிய நாடாளுமன்ற தேர்தலில் கடும் போட்டி நிலவுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்