முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐபிஎல் பிளேஆப், இறுதிப் போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை மும்முரம்

ஞாயிற்றுக்கிழமை, 5 மே 2013      விளையாட்டு
Image Unavailable

 

கொல்கத்தா: மே, - 6 - ஐபிஎல் தொடரின் பிளே ஆப் பிரிவு ஆட்டங்கள் மற்றும் இறுதிப் போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது. ஐபிஎல் குவாலிபயர் 2 மற்றும் இறுதிப் போட்டி மே 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் கொல்கத்தாவின் ்டன் கார்டன் மைதானத்தில் நடைபெறும். இதற்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கி நடந்து வருகிறது. குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ. 300 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குவாலிபயர் 1 மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் டெல்லியில் முறையே மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெறும். இவற்றுக்கான டிக்கெட் விற்பனை விவரம் விரைவில் வெளியிடப்படும். புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பெறும் அணியும், 2வது இடம் பெறும் அணியும் மே 21ம் தேதி நடைபெறும் முதல் குவாலிபயர் போட்டியில் மோதும். இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும். புள்ளிகள் பட்டியலில் 3 மற்றும் 4வது இடம் பெறும் அணிகள் எலிமினேட்டர் பிரிவில் மோதும். இப்போட்டி மே 22ம் தேதி நடைபெறும். இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி, முதல் குவாலிபயர் போட்டியில் தோற்ற அணியுடன் மோத வேண்டும். இப்போட்டி மே 24ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறும். இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் நுழையும். மே 26ம்தேதி கொல்கத்தா ்டன் கார்டன் மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெறும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்