முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.ஜி.ஆர். அரசு திரைப்பட கல்லூரிக்கு கூடுதல் விடுதி

செவ்வாய்க்கிழமை, 7 மே 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, மே.8 - எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்கள் தங்குவதற்கு கூடுதல் விடுதி கட்டப்படும் என்று செய்தித்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அறிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று செய்தித்துறை மானியக் கோரிக்கையை தாக்கல் செய்து அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறியதாவது:-

முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின்படி எம்.ஜி.ஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் மாணவர்கள் தங்கிப் பயிலும் வகையில் கூடுதல் தேவையை கருத்தில் கொண்டு மாணவர் விடுதி ரூ.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும். 

எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் முன்காண் திரையரங்கத்திற்கு நவீன உயர்தர டிஜிட்டல் டால்பி, பார்கோ புரொஜக்டர் மற்றும் நவீன ஒலி அமைப்புடன் கூடிய உபகரணங்கள் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் கொள்முதல் செய்து பொருத்தப்படும். 

இவ்வாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்