முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தோனியிடம் நிறைய கற்றுக் கொண்டேன்: பிராவோ

செவ்வாய்க்கிழமை, 7 மே 2013      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை, மே. 8 - கேப்டன் பொறுப்பு என்றால் என்ன, எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து டோணியிடமிருந்து நிறைய கற்ஏறுக் கொண்டேன் என்று கூறியுள்ளார் வேயன் பிராவோ. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கலக்கல் வீரர்களில் ஒருவர்தான் பிராவோ. நடப்புத் தொடரிலும் இவர் கலக்கி வருகிறார். அதை விட இவரது டான்ஸும் பிரபலமாகி விட்டது. தற்போது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டித் தொடரில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் பிராவோ. இதற்காக டோணிக்கு நன்றி கூறுகிறார் பிராவோ. 

சூப்பர் கேப்டன் தலைவா... டோணி ஒரு அருமயான கேப்டன். பீல்டிலும், பீல்டுக்கு வெளியிலும் அவரது நடத்தை மிகச் சிறப்பானது. நிறைய கற்றுக் கொண்டேன். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் டோணியிடம் பேசிக் கொண்டிருப்பேன். ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒன்றை கற்றுக் கொள்ள முடியும்.

இப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி தலைமையில் விளையாடுகிறேன். சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் டோணியை எதிர்த்து எனது அணி கேப்டனாக சந்திக்கப் போகிறேன். 

எனக்கு கேப்டன் பொறுப்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. தேர்வாளர்களின் முடிவுக்கு நன்றி சொல்கிறேன். அதேசமயம், இந்த சவாலை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன். எனது அணியில் நிறைய திறமையாளர்கள் உள்ளனர். அவர்களை லீட் செய்யவுள்ளேன்.. சந்தோஷமாக இருக்கிறது. ஒருங்கிணைந்து ஆடினால் கலக்கலாம் மேற்கு இந்தியத் தீவுகள் அணியில் ரவி ராம்பால், சுனில் நரைன், போலார்ட் என பல திறமையாளர்கள் உள்ளனர். அனைவரும் ஒருங்கிணைந்து ஆடினாலே போதும் கலக்கி விடலாம்.

எனக்கு லாராதான் பிடிக்கும் எனக்குப் பிடித்த வீரர்கள் என்றால் அது லாராவும், ஜேக்கஸ் கல்லிஸும்தான். அதேபோல மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் கீரன் போலார்டும் அருமையான வீரர். சிறந்த ஆல்ரவுண்டர் அவர். போலார்டுடன் இணைந்து ஆடுவது மகிழ்ச்சிக்குரியது என்றார் பிராவோ.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago