முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

``கோ'' திரை விமர்சனம்

வெள்ளிக்கிழமை, 29 ஏப்ரல் 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை,ஏப்.29 - நக்க்சல்கள் வங்கியை கொள்ளை அடிக்கிறார்கள், அதை பறந்து பறந்து போட்டோ எடுக்கிறார் நாயகன், நக்க்சல்கள் வங்கியை கொள்ளை அடித்தது போன்று தெரியவில்லை, அவர்கள் மக்களை கொள்ளை அடிக்கிற பன்னாட்டு நிறுவனங்களையும் , அரசாங்கத்தயுமே எதிர்க்கிறார்கள், எதோ வங்கி கொள்ளை பற்றி உலக சினிமாவை பார்த்து விட்டு இயக்குனர் அந்த காட்சியை சேர்த்து இருப்பாரோ என்று எண்ண தூண்டியது .பின்வரும் காட்சிகளில் போட்டோவை எடுத்து குவிக்கிறார் நாயகன் மாணவர்கள் அரசியலில் குதித்து தேர்தலில் போட்டியிடுகிறார்கள். மாணவர்களை மக்கள் ஆதரிக்க அரசியலையே புரட்டி போடுவது என்பது தான் கதை.

இது  சிறந்த அரசியல் படம். முதலில் எதிர்க்கட்சி தலைவரின் பிம்பத்தை நாயகன் ஜீவா உடைக்கிறார்   nullஅந்த தலைவர் ஜோசியத்தை நம்பி ஒரு சிறு பெண்ணை மணமுடிக்க செல்கிறார், அதை போட்டோ பிடித்து அவர் பிம்பத்தை உடைக்கிறார். நாயகனுக்கு அந்த தலைவரை எதிர்க்க வலுவான கொள்கை காரணங்களே இல்லை.

சரி அடுத்து முதல்வரின் பிம்பத்தை உடைக்க நினைத்த கதாநாயகன் ஜீவா என்ன செய்கிறார் ஒரு நிருபரை முதல்வர் செருப்பால் அடிக்கிறார், அதை மட்டுமே படம் பிடித்துவிட்டு அவரின் அரசியல் வாழ்க்கைக்கு ஆப்பு அடிக்கிறார் நாயகன் .மற்றபடி கொள்கை கத்திரிக்காய் எல்லாம் நாயகனுக்கு ஒரு பொருட்டே அல்ல. அந்த நாளிதழிலில் நாயகன் என்ன படம் எடுத்தாலும் , ஆளுங்கட்சியை எதிர்கட்சியை எதிர்த்தும் கட்டுரைகள் வருகின்றன, இது தமிழக சூழலில் எப்படி சாத்தியமாகுமா?

படத்தின் இறுதியில் நாயகன் நக்க்சல் இயக்க தலைவரிடம் எல்லாரும் ஒன்னு வச்சுருப்பாங்க, அதே போல நீnullங்க எத கேட்டாலும் ஒடுக்கப்பட்டவங்க  அப்படின்னு காரணம் சொல்வீங்க  என்பார் . கதாநாயகன் இந்தியாவில் ஒடுக்கப்பட்டவர்களே இல்லையா என்ன ? சத்தீஸ்கர் தண்டகாரண்யா காஷ்மீர் வரலாறுகள் இயக்குனருக்கு தெரியாது போலும். 

சமகால அரசியல் படம் என்று நினைப்பார்கள், அப்படி என்ன அரசியல் தான் பேசினார்கள் என்பதை தெளிவு படுத்த முடியுமா? ஏன் முதல்வரை எதிர்க்கும் பொழுது கூட கொள்கை ரீதியாய் எதிர்ப்பு காட்டாமல், கிள்ளிட்டான் அடுசுட்டான் என்பது போன்ற மொக்கை காரணங்களே காட்டப்படுகின்றன. கோ பணம் சம்பாதிக்க என்ன வேணும்னாலும் சொல்லலாம், ஊடகத்தை கையில் வைத்திருப்பவர்கள் படத்தை ரிலீஸ் செய்ய , ஊடக பத்திரிகை சுதந்திரத்தை பற்றி கூட பேசலாம் , ஒடுக்கப்பட்டவர்களை இழிவுபடுத்தலாம்.

புகைப்பட நிபுணராக வரும் ஜீவா நடிப்பில் துடிப்பு தெரிகிறது. சில காட்சிகள் நம்பும்படியாக இல்லை என்றாலும், சினிமாதனமாக உள்ளது. கே.வி.ஆனந்த் பத்திரிகை புகைப்பட நிபுணராக இருந்தவர். அரசியலில் முதல்வரை பற்றி தைரியமாக எழுத ஒரு சில பத்திரிகைகளை தவிர யாருக்கு முதுகெலும்பு உள்ளது.

ஜீவா காதலியாக ராதாவின் மகள் கார்த்திகா நிருபராக வருகிறார். 15 வயது பெண்கள் திருமணம் செய்யும் அரசியல்வாதியின் முகத்திரையை கிழிப்பதும், ஆதாரம் இல்லாமல் மாட்டிக் கொள்வது பரிதாபம். மற்றொரு நாயகி  பியா துறுதுறுப்பான நடிப்பு வெடிகுண்டு விபத்தில் சிக்கி வில்லனால் உயிர் விடுவது பரிதாபம். அஜ்மல், போஸ் வெஸ்கட், பிரகாஷ்ராஜ் ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார். வங்கி சென்னை முதல் பத்திரிகைக்கு ஐலைட் செய்திகளை கதம்பமாக கோர்த்து படத்தை உருவாக்கி உள்ளார் கே.வி.ஆனந்த்.

கோ கமிர்ஷியல் பெயரில் அரசியலை புகுத்தியுள்ளார். தேர்தலுக்கு முந்தைய படம் வந்து இருந்ததால்  ஆளுங்கட்சியின் செயல்களை எடுத்து காட்டிய படமாக அமைந்திருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago