முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக். கைதி விவகாரம்: மத்தியரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி

புதன்கிழமை, 8 மே 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, மே.9 - ஜம்முவில் உள்ள சிறையில் பாகிஸ்தான் கைதி சனாவுல்லா ரஞ்சை தாக்கப்படுவதற்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஏன் எடுக்கவில்லை என்று மத்திய அரசையும், ஜம்மு-காஷ்மீர் மாநில அரசையும் சுப்ரீம் கோர்ட்டு கேள்வி கேட்டு கண்டித்துள்ளது.

ஜம்முவில் உள்ள கோட் பால்வால் சிறையில் பாகிஸ்தான் கைதியான சனாவுல்லா ரஞ்சை கடுமையாகத் தாக்கப்பட்டார். பின்னர் அவர் சிகிச்சைக்காக சண்டிகார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதற்கிடையே இந்த பிரச்சினை தொடர்பாக மத்திய அரசையும், ஜம்மு காஷ்மீர் அரசையும் சுப்ரீம் கோர்ட்டு கடுமையாகக் கண்டித்துள்ளது.

மே மாதம் 3- ம் தேதி சிறையில் சனாவுல்லா கடுமையாகத் தாக்கப்பட்டார்.  அவர் உடல் ரீதியாக தாக்கப்படுவதற்கு முன்பாக போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் ஏன் எடுக்காமல் இருந்தன என்பதற்கு அவர்கள் தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும். இது தொடர்பாக மத்திய மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு நீதிபதி லோதா தலைமையிலான பெஞ்ச் உத்தரவிட்டது. மேலும் இந்த விஷயத்தில் பாதுகாப்பு அளிக்கத் தவறிய அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது தொடர்பான விளக்கத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், இதுபோன்ற தவறுகள் இனிமேலாவது நடக்காமல் தடுக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் மத்திய, மாநில அரசுளை கேட்டுக்கொண்டனர்.

ஜம்மு சிறையில் நடந்துள்ள தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்த மற்றொரு நீதிபதி குரியன் ஜோசப், இது மிக முக்கியமான விஷயம் என்று கூறி கண்டனம் தெரிவித்தார். சண்டிகார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஹக் என்பவர் என்னை விடுதலை செய்து பாகிஸ்தானுக்கு திரும்ப அனுமதிக்க வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்தார். ஹக் என்பவர் அவருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை பூர்த்தி செய்யவில்லை. எனவே அவரது கோரிக்கையை ஏற்க முடியாது என்று கோர்ட்டு நிராகரித்தது.                                             

ஹக் என்பவர் பிரச்சினையைப் பொறுத்தவரை, அவர் ஒரு ஆயுள் தண்டனைக் கைதி என்று நாங்கள் ஏற்கெனவே கூறியுள்ளோம். எனவே அவரை திரும்ப அனுப்ப வேண்டும் என்ற கேள்வி எழவில்லை என்றும், அவரது தண்டனை பற்றி மாநில நிர்வாகம் ஒரு முடிவு எடுத்த நிலையில் கோர்ட்டு அதில் தலையிடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்