முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் புனே வாரியர்ஸ் இன்று மோதல்

புதன்கிழமை, 8 மே 2013      விளையாட்டு
Image Unavailable

 

புனே, மே. 9 - ஐ.பி.எல். - 6 போட்டியில் புனேயில் இன்று நடக்க இருக்கும் லீக் ஆட்டத் தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் புனே வாரியர்ஸ் அணியும் மோத உள்ளன. தற்போது நடந்து வரும் ஐ.பி.எல். தொடரில் புனே வாரியர்ஸ் அணி தடு மாறி வருகிறது. எனவே இந்த பலவீனத்தை பயன்படுத்தி வெற்றி பெற கொல்கத்தா திட்டமிட்டுள்ளது. 

புள்ளிகள் பட்டியலில் இந்த இரண்டு அணிகளும் கடைசி 4 இடத்தில் உள்ளன. நைட் ரைடர்ஸ் அணி 12 ஆட்ட த்தில் ஆடி 4 வெற்றியுடன் 8 புள்ளி பெ ற்று உள்ளது. புனே அணி 12 ஆட்டத் தில் 10 தோல்வி மற்றும் 2 வெற்றியுட ன் 4 புள்ளி பெற்று உள்ளது. 

நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி 4 அணிகள் பங்கேற்கும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை ஏற்கனே இழந்து விட்டது. 

இருந்த போதிலும், இன்றைய போட்டியில் ஆறுதல் வெற்றி பெற நல்ல வா  ய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வெற்றி யால் அந்த அணிக்கு கெளரவம் கிடை க்கும். 

ஆனால் கொல்கத்தா அணிக்கு வெற்றி எளிதாக கிடைத்து விடாது. கடந்த லீக் கில் அந்த அணி மும்பை அணியிடம் படுதோல்வி அடைந்தது குறிப்பிடத் தக்கது. 

இந்தப் போட்டியில் முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 170 ரன்னை எடுத்தது. பின்பு ஆடிய கொல்கத்தா அணி 18.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 105 ரன்னில் சுருண்டது. 

இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஆட்டத்தில் 65 ரன் வித்தியாசத்தி ல் வெற்றியைப் பதிவு செய்தது. கொல் கத்தா அணி தரப்பில் காலிஸ் (24)மற்று ம் டெபபிரட்டா தாஸ் (23) இருவர் மட்டுமே 20 ரன்னைத் தாண்டினர். மற்ற வீரர்கள் குறைந்த ரன்னில் ஆட்டம் இழந்தனர். 

கொல்கத்தா அணியில் கேப்டன் காம் பீர் தவிர மற்ற முன்வரிசை வீரர்கள் இந்த வருட சீசனில் மோசமாக ஆடி வரு கின்றனர். காம்பீர் 3 அரை சதத்துடன் போட்டியைத் துவக்கினார். பின்பு அவரும் மோசமாக  ஆடி வருகிறார். 

ஆனால் கொல்கத்தா அணியைப் பொ றுத்தவரை காம்பீர் தான் 320 ரன் எடுத் து அதிக ரன் எடுத்த வீரர்களில் முதலி டத்தில் இருக்கிறார். 

அதன் பின்பு அவர் குறைந்த ரன்னில் ஆட்டம் இழந்து வருவதால் மிடில் ஆர் டர் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. 

நம்பகமான வீரரான ஜாக்ஸ் காலிஸ் கூட தொடர்ந்து சிறப்பாக ஆட முடிய வில்லை. இது அந்த அணிக்கு பின்னடைவாகும். அவர் இதுவரை மொத்தம் 243 ரன்னை மட்டும் எடுத்து இருக்கிறார். 

பெரிய ஷாட்டுகளை அடிக்கக் கூடிய மார்கன் ஒருவர் மட்டும் மிடில் ஆர்ட ரில் நன்கு ஆடி வருகிறார். அவர் இது வரை மொத்தம் 283 ரன்னைக் குவித்து இருக்கிறார். 

யூசுப் பதான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் சிறப்பாக ஆடி 49 ரன்னை எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். மற்ற ஆட்டங்களில் அவர் மோசமாகவே ஆடி வருகிறார். 

கொல்கத்தா அணியின் பந்து வீச்சைப் பொறுதவரை சுனில் நரீன் ஒருவர் மட்டுமே நன்கு பந்து வீசி வருகிறார். மற்ற வீரர்களின் பந்து வீச்சு எடுபடவில் லை. நரீன் இதுவரை 16 விக்கெட்எடு த்து இருக்கிறார். 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் புனே வாரியர்ஸ் அணிகளுக்கு இடை யேயான இந்த ஆட்டம் இரவு 8.00 மணிக்கு துவங்குகிறது. இந்தப் போட்டி சோனி மேக்ஸ் மற்றும் தூர்தர்ஷன் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்