வில்லியம் திருமணம் - 2 ஆயிரம் பேருக்கு அழைப்பு

செவ்வாய்க்கிழமை, 22 பெப்ரவரி 2011      உலகம்
Princess

 

லண்டன்,பிப்.22 - இங்கிலாந்து இளவரசர் வில்லியம் திருமணத்திற்கு 2 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் டயானா தம்பதியின் மூத்த மகன் வில்லியம். இவருக்கு வருகிற ஏப்ரல் 29 ம் தேதி லண்டனில் திருமணம் நடக்கிறது. இவர் தனது நீண்ட நாள் காதலி கேத்மிடில்டனை மணக்கிறார். இந்த நிலையில் திருமண அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இவரின் பாட்டி ராணி எலிசபெத் திருமணத்திற்கு அழைப்பது போன்று பத்திரிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அநேகமாக சுமார் 2 ஆயிரம் பேருக்கு அழைப்பு அனுப்பப்படலாம் என தெரிகிறது. திருமணத்திற்கு இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் நிச்சயம் அழைக்கப்படுவார் எனத் தெரிகிறது. அதே சமயம் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அழைப்பு அனுப்பப்பட மாட்டாது என்றும் தெரிகிறது. ஏனெனில் இளவரசர் வில்லியம் பட்டத்தரசர் இல்லை. அவரது தந்தை சார்லசுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில்தான் இருக்கிறார். இளவரசர் திருமணம் செய்யவிருக்கும் மணமகள் கேத்மிடில்டனின் காதலனுக்கும் திருமண அழைப்பிதழ் அனுப்பப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Viswasam Review | Ajith | Nayanthara | Viswasam Movie review

PETTA MOVIE REVIEW | Petta Review | Rajinikanth | Vijay Sethupathi | Karthik Subbaraj | Anirudh

Thai month festival spl - 2019 | விளம்பி வருடம் தை மாதம் பண்டிகைகளின் சிறப்பு

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 5

Power of Attorney | பவர் பத்திரம் | பவர் ஆப் அட்டார்னி | பொது அதிகார பத்திரம்

குடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து நடிகர் சக்தி கைதாகி விடுதலை

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

இதை ஷேர் செய்திடுங்கள்: