முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிடிபட்ட ரூ.5 கோடி விவகாரத்தில் தீவிர விசாரணை

வியாழக்கிழமை, 28 ஏப்ரல் 2011      அரசியல்
Image Unavailable

திருச்சி. ஏப்.29 - திருச்சியில் பிடிபட்ட ரூ.5 கோடி விவகாரத்தில் வருவாய்த்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்தார். திருச்சியில் நேற்று 8 மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு வாக்கு எண்ணும் பயிற்சி நடந்தது. இதனை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் நடத்தினார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் கடந்த 13ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிவடைந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு ஓட்டும் எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. தமிழகம் முழுவதும் 94 மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு அவற்றிற்கு சுழற்சி அடிப்படையில் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பஞ்சப்nullர் சாரநாதன் பொறியியல் கல்லூரி மற்றும் சமயபுரம் ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரியிலும் வைக்கப்பட்டு உள்ளன. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் அடுத்த மாதம் (மே) 13ந்தேதி காலையில் எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

வாக்கு எண்ணிக்கையின்போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் ஒவ்வொரு சுற்று வாக்குகளையும் எண்ணி முடிவு அறிவிப்பது எப்படி என்பது பற்றி தேர்தல் ஆணையம் பல விதிமுறைகளை வகுத்து உள்ளது. இந்த விதிமுறைகளை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் தொகுதி வாரியாக தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு விளக்குவதற்காக தேர்தல் ஆணையம் மாவட்ட வாரியாக பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.

திருச்சியில் நேற்று (வியாழன்) 8 மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு ஓட்டு எண்ணிக்கை பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பிற்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தலைமை தாங்கினார். அவருடன் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி அமுதா மற்றும் அதிகாரிகளும் உடனிருந்தனர்.

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை 10 மணி முதல் 1 மணி வரை பயிற்சி நடைபெற்றது. பயிற்சி வகுப்பில் திருவண்ணாமலை, கடலூர், கரூர், பெரம்பலூர், அரியலூர், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் பயிற்சி வகுப்பில் திருச்சி, நாமக்கல், விழுப்புரம் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

பயிற்சிக்கு முன்னதாக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் நபர்கள் அடையாள அட்டை இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். வாக்கு எண்ணிக்கை வெப் கேமரா மூலம் பதிவு செய்யப்படும்.

nullத் வாரியாக வாக்குகள் எண்ணப்படும். தபால் ஓட்டு போட்டதில் சில இடங்களில் வாக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும். திருச்சியில் பிடிபட்ட 5 கோடி பண விவகாரத்தில் வருவாய்த்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வருகின்ற 9,10 தேதிகளில் தேர்தல் மேற்பார்வையாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். 

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள சாரநாதன், என்​​ஜினீயரிங் கல்லூரிக்கு சென்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் ஆய்வு செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago