முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சஞ்சய்தத் மனு தள்ளுபடி: மே 15-ல் சரணடைய உத்தரவு

வெள்ளிக்கிழமை, 10 மே 2013      சினிமா
Image Unavailable

 

புது டெல்லி, மே. 11 - மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை ரத்து செய்யக் கோரி பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை சுப்ரீம் கோர்ட் நேற்று தள்ளுபடி செய்தது. மேலும் அவர் வரும் 15 ம் தேதி சரணடைந்து சிறைத் தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டது. 

மும்பையில் 1993 ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பின்போது சஞ்சய் தத்துக்கு தடா நீதிமன்றம் 6 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து. பின்னர் அந்த தண்டனை சுப்ரீம்  கோர்ட்டில் 5 ஆண்டாக குறைக்கப்பட்டது. இருப்பினும் ஒன்றரை ஆண்டுகள் ஏற்கனவே சிறையில் இருந்ததால் மூன்றரை ஆண்டுகாலம் சிறையில் இருக்க வேண்டும் என்றும் இதற்காக அவர் சரணடைய கால அவகாசமும் சுப்ரீம் கோர்ட்டால் கொடுக்கப்பட்டது. 

இதனிடையே தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையையே ரத்து செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனு ஒன்றை சஞ்சய் தத் தாக்கல் செய்திருந்தார். சஞ்சய்தத் தாக்கல் செய்த மனுவுடன் தண்டனை விதிகக்ப்பட்ட மேலும் 6 பேரின் மறு ஆய்வு மனுக்களும் நேற்று விசாரணைக்கு வந்தது. சஞ்சய்தத் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் , அவரது தண்டனையை ரத்து செய்வதற்கு முன்னுரிமை கொடுக்கப்படக் கூடிய காரணம் எதுவும் இல்லை. இதனால் அவரது மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அவர் மே 15 ம் தேதி சரணடைந்து சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதேபோல் தண்டனை ரத்து கோரி தாக்கல் செய்யப்பட்ட இதர மறு ஆய்வு மனுக்களையும் சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. இதனால் சஞ்சய்தத் சிறைத் தண்டனையை அனுபிவித்தாக வேண்டிய நிலை உருவாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்