புல்லருக்கு தண்டனையை குறைக்க ஜெர்மன் கோரியதா?

வெள்ளிக்கிழமை, 10 மே 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,மே.11 - காலீஸ்தான் தீவிரவாதிக்கு வழங்கப்பட்டுள்ள தூக்குத்தண்டனையை குறைக்க இந்தியாவிடம் ஜெர்மன் கோரியதா என்ற கேள்விக்கு அந்த நாட்டு தூதர் பதில் அளிக்க மறுத்துவிட்டார். புதுடெல்லியில் கடந்த 1993-ம் ஆண்டு குண்டுவெடித்தது. இதில் 9 பேர் பலியானார்கள் மற்றும் இளைஞர் காங்கிரஸ் தலைவர் எம்.எஸ். பிட்டா உள்பட 23 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட காலீஸ்தான் தீவிரவாதி தேவேந்தர் பால் சிங் புல்லருக்கு சுப்ரீம்கோர்ட்டு தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. மேலும் அவரது கருணை மனுவையும் ஜனாதிபதி நிராகரித்துவிட்டார். இதனையொட்டி தீவிரவாதி புல்லருக்கு தூக்குத்தண்டனையை குறைக்கக்கோரி பிரதமர் மன்மோகன் சிங்கை பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் நேரில் சந்தித்து வலியுறுத்தியதாக தெரிகிறது. 

இந்தநிலையில் குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்படுவதை ஜெர்மன் எதிர்ப்பதாக இந்தியாவுக்கான ஜெர்மன் நாட்டு தூதர் மைக்கேல் ஸ்டெய்னர் நேற்று புதுடெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். அதேசமயத்தில் புல்லருக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத்தண்டனைக்கு கருணை காட்டுமாறு இந்திய அரசை ஜெர்மன் கோரியுள்ளது. இது உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவது மாதிரி இல்லையா? என்று நிருபர்கள் கேட்டதற்கு இது உள்நாட்டு விவகாரத்தில் தலையிட்டதாக அர்த்தம் கொள்ள முடியாது என்றார். ஜெர்மன் அதிபர் ஜாக்கிம் கவுக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர் கய்டோ வெஸ்டர்வெல்லியும் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கும் வெளியுறுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்துக்கும் கடிதம் எழுதிய இருப்பதாகவும் அதில் புல்லருக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கும் படி கூறப்பட்டுள்ளதாம். இது உள்நாட்டு விவாகரத்தில் தலையிடுவது மாதிரி இருக்கிறதே என்று நிருபர்கள் திரும்பக்கேட்டதற்கு  பதில் அளித்த மைக்கேல் தூக்குத்தண்டனை கூடாது என்பது ஜெர்மன் கொள்கையாகும். தூக்குத்தண்டனை விதிப்பதால் சரியான நீதி வழங்கியதாக கூறமுடியாது என்றும் மைக்கேல் கூறினார்.  உலக அளவில் தூக்குத்தண்டனை கூடாது என்று ஜெர்மன் பிரசாரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: