கராச்சியில் இரட்டை குண்டு வெடிப்பு: 9 பேர் பலி

சனிக்கிழமை, 11 மே 2013      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், மே. 12 - வரலாறு காணாத வன்முறை தேர்தலை எதிர்கொண்டிருக்கிறது பாகிஸ்தான். நேற்று வாக்குப் பதிவின் போது கராச்சி நகரில் நடத்தப்பட்ட இரட்டை வெடிகுண்டுத் தாக்குதலில் 9 பேர் பலியாகினர்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு நேற்று காலை பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. ஏற்கெனவே தேர்தலில் போட்டியிட்ட 107 வேட்பாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். தேர்தல் நேர வன்முறைகளில் 130 பேர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில் நேற்று காலை வாக்குப் பதிவு துவங்கிய சற்று நேரத்தில் கராச்சியில் அவாமி தேசிய கட்சியின் வேட்பாளர் ஒருவரைக் குறிவைத்து வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 9 பேர் பலியாகி உள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: