முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெருப்போடு விளையாடாதீர்கள்! மம்தா எச்சரிக்கை

சனிக்கிழமை, 11 மே 2013      இந்தியா
Image Unavailable

 

கொல்கத்தா, மே. 12 - என் பெயரை ஊழல் குற்றச்சாட்டில் இழுக்க வேண்டும் என மத்திய அரசு வரிந்து கட்டிக்கொண்டு வேலை செய்கிறது. நெருப்போடு விளையாட வேண்டாம் என்று மத்திய அரசுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரித்துள்ளார்.

புர்ட்வான் நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, 

நிலக்கரி சுரங்க ஊழல் கதாநாயகர்கள் எங்களுக்கு எதிராக சதிவலை பின்னத் தொடங்கியுள்ளனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் எங்கள் அரசுக்கும் இடையூறு ஏற்படுத்த தனது கட்டுப்பாட்டில் இருக்கும் எல்லா துறைகளையும் மத்திய அரசு ஏவி விட்டுள்ளது. நாங்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்த போதே எங்கள் கட்சி எம்.பி.க்கள் மீது வருமான வரி துறையினரை மத்திய அரசு ஏவி விட்டது.

உங்களோடு இருந்த காலத்தில் நாங்கள் கெட்டவர்களாக இருந்தோம் எனும் போது உங்களுடன் இல்லாத நேரத்திலும் நாங்கள் கெட்டவர்கள் தான். நாங்கள் மாயாவதியை தொட்டுப் பார்த்து விட்டோம். முலாயம் சிங்கை தொட்டுப் பார்த்து விட்டோம். ஆனால், எங்களால் மம்தாவை தொட முடியவில்லை என்று மத்திய அரசு கூறுகிறது. எனது பெயரையும் இழுக்க வேண்டும் என மத்திய அரசு வரிந்து கட்டிக் கொண்டு வேலை செய்கிறது.

நான் செல்வந்தர் குடும்பத்தைச் சேர்ந்தவள் இல்லை. ஏழைகளின் குடும்பத்தை சேர்ந்தவள். முதல்வராக மக்கள் நினைக்கவில்லை. மம்தாவாகத்தான் என்னைத் தெரியும். நான் யாருக்கும் தலை வணங்க மாட்டேன். நெருப்போடு விளையாட வேண்டாம் என்று மத்தியில் ஆட்சி பொறுப்பில் இருப்பவர்களுக்கு கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

மேற்கு வங்கத்தில் இருக்கும் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் பா.ஜ.க.வின் ஒரு பிரிவினர், திரிணாமுல் கட்சிக்கு எதிராகவும், ஆட்சிக்கு எதிராகவும் சதிவலை பின்னி வருகின்றனர். அந்த சதிவலையை நாம் கிழித்தெறிவோம். இன்னும் 3 முதல் 6 மாதத்திற்குள் நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெறும். டெல்லியில் நாம் மாற்றத்தை உருவாக்குவோம்.

மேற்கு வங்காள மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறக் கூடாது. வரும் பாராளுமன்ற தேர்தலில் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்வேன் என்றும் மம்தா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago