முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே ராஜினாமா

சனிக்கிழமை, 11 மே 2013      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,மே.11 - நிலக்கரி சுரங்க விவகாரத்தில் தேவையில்லாமல் எழுந்துள்ள பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தேன் என்று அஸ்வினி குமார் தெரிவித்துள்ளார்.  ரூ.ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி நிலக்கரி சுரங்க ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. இந்த விசாரணை அறிக்கையை சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்ஹாவை எடுத்து வரச்சொல்லி மத்திய சட்ட அமைச்சர் பகிர்ந்துகொண்டார். இதற்கு சுப்ரீம்கோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்தது. இதனையொட்டி அமைச்சர் பதவியில் இருந்து அஸ்வினி குமார் ராஜினாமா செய்துவிட்டார். 

ராஜினாமா குறித்து அவர் நேற்று டெல்லியில் உள்ள அவரது வீட்டில் நிருபர்களுக்கு விளக்கினார். அப்போது அவர் கூறுகையில் அறிக்கையை பகிர்ந்துகொண்டதால் தேவையில்லாமல் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க நான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று என்னை பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டார். அதனை ஏற்றுக்கொண்டு தேவையில்லாமல் எழுந்துள்ள பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தேன் என்றார். 

அதேசமயத்தில் அறிக்கை பகிர்ந்துகொண்ட விவகாரத்தில் சுப்ரீம்கோர்ட்டு எனக்கு எதிராக கடுமையாக எதுவும் கூறவில்லை என்று அஸ்வினி குமார் கூறினார். என்னுடைய மனசாட்சி சுத்தமாக இருக்கிறது. உண்மையும் நீதியும் வெல்லும் என்ற நிலைப்பாட்டில் நான் உறுதியாக இருக்கிறேன். கட்சியின் விசுவாசமான தொண்டராக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன். என் மீது காங்கிரஸ் தலைவர்களில் யாரும் நம்பிக்கையை இழந்துவிட்டனர் என்று நான் நினைக்கவில்லை என்றும் குமார் தெரிவித்தார். நிலக்கரி சுரங்க ஊழல் விசாரணையில் சி.பி.ஐ.யின் பொறுப்பு குறித்து சுப்ரீம்கோர்ட்டு கண்டனம் தெரிவித்திருப்பது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு பதில் அளித்த குமார், எனக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டு கடுமையாக எதுவும் கூறவில்லை என்று திரும்பக்கூறினார். இறுதியில் உண்மையும் நீதியும் வெல்லும் என்று குமார் மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்