முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கபிலுக்கு சட்டம் - சி.பி.ஜோஷிக்கு ரயில்வே ஒதுக்கீடு

சனிக்கிழமை, 11 மே 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,மே.12 - மத்திய அமைச்சர்கள் கபில் சிபலுக்கு சட்டம் மற்றும் சி.பி.ஜோஷிக்கு ரயில்வே இலாகாவும் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

நிலக்கரி சுரங்க ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. இந்த விசாரணை அறிக்கையை சி.பி.ஐ.இயக்குனர் ரஞ்சித் சின்ஹாவை எடுத்துவரச்சொல்லி சட்ட அமைச்சர் அஸ்வினி குமார் பகிர்ந்து கொண்டார். இதற்கு சுப்ரீம்கோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்தது. இதனையொட்டி அவரை அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. அதனால் அஸ்வினி குமாரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க பிரதமர் மன்மோகன் சிங்கை சோனியா கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. ஆரம்பத்தில் மன்மோகன் சிங் தயக்கம் காட்டியதாகவும் ஆனால் சோனியா தொடர்ந்து வலியுறுத்தியதன் விளைவாக அஸ்வினி குமார் அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டார். இதற்கு பதிலாக புதிய அமைச்சர் நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அஸ்வினி குமார் வகித்த சட்டம் இலாகாவை மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபலிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. மத்திய ரயில்வே அமைச்சராக இருந்த பவன் குமார் பன்சால், தன்னுடைய மருமகன் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டார். அவருக்கு பதிலாக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கே ரயில்வே அமைச்சராக நியமிக்கப்படலாம் என்று பேச்சு அடிபட்டது. இந்தநிலையில் ரயில்வே இலாகாவும் மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் சி.பி.ஜோஷியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி மாளிக்கையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு மூத்த அமைச்சர்களுக்கு இந்த இலாகாக்கள் ஒதுக்கப்பட்டிருந்தாலும் இந்த இலாகாக்களை நீண்ட காலத்திற்கு கூடுதல் பொறுப்பாக பார்ப்பது மிகவும் கடினமாக வேலையாகும். அதனால் பன்சால் மற்றும் அஸ்வினி குமாருக்கு பதிலாக புதிய அமைச்சர்கள் விரைவில் நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது. 

இந்தநிலையில் பன்சால், அஸ்வினி குமார் மாதிரி பிரதமர் மன்மோகன் சிங்கும் பதவி விலக வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தெரிவித்துள்ளார். மேலும் பிரதமரை பதவி விலகச்சொல்வதோடு தேசிய ஆலோசனைக்குழு தலைவர் பதவியில் இருந்து சோனியா காந்தியும் விலக வேண்டும் என்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசுவாமி கோரியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்