முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பன்சாலிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு

ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, மே. 13 - ரயில்வே பணி நியமன ஊழலில் ஆதாரங்கள் சிக்கியதால் முன்னாள் மத்திய அமைச்சர் பன்சாலிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தவுள்ளது. இதற்காக அவருக்கு சம்மன் அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

ரயில்வே வாரிய மின் பிரிவு உறுப்பினர் என்ற உயர் பதவியை பெற்று தருவதற்காக மகேஷ்குமார் என்ற அதிகாரி ரயில்வே மந்திரியாக இருந்த பன்சாலின் சகோதரி மகன் விஜய்சிங்லாவை தொடர்பு கொண்ட போது சிங்லா ரூ. 10 கோடி லஞ்சம் கேட்டிருக்கிறார். இதையடுத்து மகேஷ்குமார் முதல் தவணையாக ரூ. 90 லட்சம் வழங்கிய போது சி.பி.ஐ. கையும், களவுமாக பிடித்து விட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து மகேஷ்குமார், விஜய் சிங்லா மற்றும் இடைத்தரகர்கள் என பலரையும் கைது செய்து விசாரித்து வருகிறது. 

பன்சாலின் வீட்டில் வைத்தே இந்த பேரம் நடந்திருப்பது விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. இதையடுத்து பன்சாலின் பிடி இறுகியது. இதன் காரணமாக அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சி.பி.ஐ. யின் முதல் நிலை அறிக்கையில், பன்சாலின் சகோதரி மகன் விஜய் சிங்லாதான் முதல் குற்றவாளி என்று கூறப்பட்டுள்ளது. ரயில்வே வாரியத்தின் பணியாளர் பிரிவு உறுப்பினராக இருந்து வந்த மகேஷ்குமார், செல்வாக்கு மிக்க உயர் பதவியை பெறுவதற்கு விஜய் சிங்லாவிடம் 10 கோடி ரூபாய் பேரம் பேசி இருக்கிறார். இது தொடர்பாக கடந்த மாதம் 15 ம் தேதி பேரம் இறுதி செய்யப்பட்டுள்ளது. மறுநாள் ஏப்ரல் 16 ம் தேதி மும்பையில் மத்திய ரயில்வேயின் 68 வது ஆண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்று மகேஷ்குமாரை கவுரவிக்க பன்சால் மும்பை சென்றுள்ளார். மும்பைக்கு சென்ற பன்சால் 17 ம் தேதி மகேஷ்குமாரை அழைத்து பேசியுள்ளார். 

மகேஷ்குமார் பணி நியமனம் தொடர்பாக சிங்லா ராகுல் பண்டாரி, நாராயண்ராவ், மஞ்சுநாத், கோயல் ஆகியோரிடையே 90 நிமிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. மகேஷ்குமார், சிங்லா மூலமாக ரயல்வே வாரிய மின் பிரிவு உறுப்பினர் பதவியை பிடிக்க பேரம் பேசி கொண்டிருக்கிறார் என்ற தகவல் கிடைத்த பிறகு இரண்டு மாதங்களாக அவர்களை சி.பி.ஐ. அதிகாரிகள் கண்காணித்தனர். அவர்களது தொலைபேசி உரையாடல்களும் பதிவு செய்யப்பட்டன. 

இவற்றின் அடிப்படையில் அடுத்த கட்டமாக பன்சாலிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர். இந்த விசாரணைக்கு ஆஜராகுமாறு பன்சாலுக்கு சம்மன் அனுப்பவும் சி.பி.ஐ. முடிவு செயதுள்ளது. இந்த நிலையில் மகேஷ்குமாரின் வீடு மற்றும் கட்டிடங்களில் சோதனைகள் நடத்துவது தொடர்பான தகவல்களை சி.பி.ஐ. அதிகாரிகளில் சிலர் மகேஷ்குமாரின் மனைவியிடம் கொண்டு போய் சேர்த்துள்ளனர். அவர்கள் மீதும் துறை ரீதியிலான நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்