முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர்கள் நீக்கம்: பிரதமர் - சோனியா எடுத்த முடிவுதான்

ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,மே.13 - மத்திய அமைச்சர் பதவியில் இருந்து பவன் குமார் பன்சால் மற்றும் அஸ்வினி குமார் ஆகியோர் நீக்கப்பட்டது பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்தி ஆகியோர் சேர்ந்து கூட்டாக எடுக்கப்பட்ட முடிவுதான் என்று காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது. 

நிலக்கரி சுரங்க ஊழல் விசாரணை அறிக்கையை சி.பி.ஐ.யையிடம் இருந்து பெற்று அதை பகிர்ந்துகொண்டதற்காக மத்திய சட்ட அமைச்சர் அஸ்வினி குமார் நீக்கப்பட்டார். மேலும் ரயில்வேயில் உயர் பதவிக்கு ஆள் நியமிப்பதில் ரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சாலின் மருமகன் ரூ.10 கோடி பேரம் பேசி ரூ.90 லட்சம் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டில் ரயில்வே அமைச்சர் பதவியில் இருந்து பன்சால் நீக்கப்பட்டார். 

இந்த இரண்டு அமைச்சர்களையும் பதவி நீக்கம் செய்ய பிரதமர் மன்மோகன் சிங் தயக்கம் காட்டியதாக கூறப்படுகிறது. சோனியா காந்தியின் வற்புறுத்தலின் காரணமாகத்தான் அவர்கள் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதை காங்கிரஸ் அடியோடு மறுத்து உள்ளது. இரண்டு அமைச்சர்களின் நீக்கமானது பிரதமர் மன்மோகன் சிங்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் சேர்ந்து எடுத்த முடிவுதான் என்று காங்கிரஸ் கூறியுள்ளது. சோனியா காந்தியின் வற்புறத்தல் காரணமாகத்தான் அவர்கள் நீக்கப்பட்டனர் என்று கூறுவது முற்றிலும் தவறாகும் என்று காங்கிரஸ் கட்சியின் பத்திரிகை பிரிவு தலைவர் திவிவேதி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார். 

கேபினட் அமைச்சரவையில் மாற்றம் செய்யும் உரிமையை பிரதமரிடம் இருந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பறித்துவிட்டார். அதனால் பிரதமர் பதவியில் இருந்து மன்மோகன் சிங் ராஜினாமா செய்வதோடு லோக்சபையை கலைத்துவிட்டு தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் என்று அதன்வானி தனது பிளாக் போஸ்ட்டில் எழுதியிருந்தார். பிரதமர் மன்மோகன் சிங்கை சோனியா காந்தி சந்தித்து அமைச்சர் பதவியில் இருந்து அஸ்வினி குமாரையும் பன்சாலையும் நீக்க வேண்டும் என்று சோனியா வற்புறுத்தியதால்தான் அவர்களை மன்மோகன் சிங் நீக்கினார் என்றும் அதில் அத்வானி மேலும் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்