இந்தியாவுடன் நல்லுறவு: ஷெரீப் விருப்பம்: பிரதமர் வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, மே.13 - பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ள நவாஸ் ஷெரீப், இந்தியாவுடன் நல்லுறவை தொடர விரும்புவதாக தெரிவித்துள்ளார். ஷெரீப்புக்கு பிரதமர் மன்மோகன் சிங் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.

பாகிஸ்தானில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் நவாஸ் ஷெரீப்பின் முஸ்லீம் லீக் கட்சி அதிக இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. மொத்தம் உள்ள 272 இடங்களில் 234 தொகுதிகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் நவாஸ் ஷெரீப்பின் முஸ்லீம் லீக் கட்சி 107 இடங்களையும் இம்ரான் கான் கட்சி 32 இடங்களையும் ஆளும் கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி 28 இடங்களையும் கைப்பற்றி உள்ளன. இம்ரான் கான் கட்சி கூட இரண்டாவது இடத்தை பெற்றுவிட்டது. ஆனால் ஜர்தாரியின் ஆளும் கட்சி 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுவிட்டது. 107 இடங்களை பிடித்துள்ள ஷெரீப், சுயேட்சைகள் ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறார். பின்னர் பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர் 1998-ல் இந்திய பிரதமராக வாஜ்பாயுடன் தாம் நல்லுறவு கொண்டியிருந்ததாகவும் அதே உறவை தொடர தாம் விரும்புவதாகவும் குறிப்பிட்டார். இதை இந்தியா வரவேற்றுள்ளது. இதுகுறித்து பேட்டி அளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், பாகிஸ்தானின் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு இந்தியா ஆதரவு அளிக்கும் என்றார். பாகிஸ்தானில் புதிய அரசு அமைந்தவுடன் பிரதமர் முறைப்படி வாழ்த்து தெரிவிப்பார். பாகிஸ்தான் மீது இந்தியா எப்போதும் விரோதம் கொண்டதல்ல என்றும் சல்மான் குர்ஷித் கூறினார். பாகிஸ்தானில் ஜனநாயகம் மலர்ந்திருப்பதையும் அவர் வரவேற்றார். 

இதனிடையே வெற்றிபெற்றுள்ள நவாஸ் ஷெரீப்புக்கு பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு வருமாறும் அவருக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். ஷெரீப் வெற்றியையொட்டி அவரது கட்சியை சேர்ந்தவர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்: