முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக முதல்வராக சித்தராமையா இன்று பதவியேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013      இந்தியா
Image Unavailable

 

பெங்களூர், மே. 13  - கர்நாடக முதல்வராக சித்தராமையா இன்று பதவியேற்றுக்கொள்கிறார். இந்த பதவியேற்பு விழாவில் சுமார் 1 லட்சம் பேர் கலந்து கொள்கின்றனர். கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைக்கவிருக்கிறது. கர்நாடக முதல்வராக மூத்த காங்கிரஸ் தலைவர் சித்தராமையா தேர்வு செய்யப்பட்டார். கர்நாடகாவின் 28 வது முதல்வராக அவர் இன்று பதவியேற்றுக் கொள்கிறார். இந்த பதவியேற்பு விழா பெங்களூரில் உள்ள காண்டிரா விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மைதானத்தில் நடந்து வருகிறது. மைதானத்தின் முன்பக்கம் உள்ள 2 நுழைவு வாயில்கள் வழியாக முக்கிய பிரமுகர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பின்பக்க வாயில்கள் வழியாக பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள். 

கடந்த 2008 ம் ஆண்டு எடியூரப்பா முதல்வராக பதவியேற்ற போது அந்த விழாவில் சுமார் 75,000 பேர் கலந்து கொண்டனர். தற்போது சித்தராமையா பதவியேற்பு விழாவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூர் குமரகிருபா ரோட்டில் உள்ள சித்தராமையா வீடு விழாக்கோலம் பூண்டுள்ளது. சித்தராமையாவின் ஆதரவாளர்கள் தங்கள் தலைவர் முதல்வராவதை பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். மேலும் கட்சி நிர்வாகிகள், திரை நட்சத்திரங்கள், அரசு உயர் அதிகாரிகள் என்று ஏராளமானோர் சித்தராமையாவை அவரது வீட்டில் வைத்து சந்தித்து பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago