முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.மு. கூட்டணி நம்பிக்கையை இழந்து விட்டது: மோடி

திங்கட்கிழமை, 13 மே 2013      இந்தியா
Image Unavailable

 

ஆமதாபாத், மே.14 -  ஐக்கிய முற்போக்கு கூட்டணி பற்றி இந்தியாவில் மட்டுமல்லாமல், அமெரிக்காவிலும் இதைப்பற்றி வீடியோ கான்பரன்சிங் மூலம் குறை கூறியுள்ளார் என்று காங்கிரஸ் தலைமையிலான  ஐக்கிய முற்போக்கு  கூட்டணி கூறியுள்ள குற்றச்சாட்டுக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பதிலளித்துள்ளார். இதுபற்றி நிருபர்களிடம் அவர் கூறியதாவது: ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு  தனது தவறான ஆட்சி மூலம் இந்தியாவிலுள்ள மக்களிடம் அவ நம்பிக்கையை, அதாவது நம்பிக்கையின்மையை, நம்பகத்தன்மையை  இழந்துள்ளது. இத்தகைய நம்பிக்கையின்மை ஏற்பட்டுள்ளதால் இந்திய மக்களிடம் இது பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் நான் ஏற்படுத்தியுள் வளர்ச்சித் திட்டங்களை  வரலாறு தெரிவிக்கும்.  என்னைப் பற்றி மற்றவர்கள் எப்படி விமர்சித்தாலும் அதுபற்றி எனக்குக் கவலை இல்லை என்றார்.

  குஜராத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள வளர்சித் திட்டங்களில் பெருமளவு குறைபாடுகள் உள்ளன. குஜராத் மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சமூக வளர்ச்சித் திட்டங்களால் ஏழைகள் இன்னும் ஏழைகளாகாவே உள்ளனர் என்று என்னைப் பற்றி விமர்சனம் வந்துள்ளது. ஆனால் குஜராத் மாநிலத்தில் மிக தொலைவில் உள்ள கிராமங்களுக்கும் வளர்ச்சித் திட்டம் கிடைத்துள்ளது.             

  குஜராத் மாநிலம் 33 சதவீதம் சத்துணவு வழங்கியதில் பெரும் வெற்றி பெற்றுள்ளது என்று மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் தனது அறிக்கையில் கூறியுள்ளது. குஜராத் மாநிலத்தின் வளர்ச்சியை உலகமே கவனித்து வருகிறது என்றும் 4 முறை முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி கூறினார். 

உலக அரங்கில் குஜராத்தியர்கள் புகழ்பெற்ற நிலையில் உள்ளனர். அவர்கள் இந்திய கலாச்சாரத் தூதுவர்களாக உள்ளனர்.  குஜராத்தியர்கள், சர்தார் வல்லபாய் படேலுக்கு சிலை வைக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று உலகெங்கிலும் உள்ள குஜராத்தியர்களை மோடி கேட்டுக்கொண்டார். இந்த சிலை அமைப்பதன் மூலம் உரிமை இரண்டு மடங்காகும் என்றும் மோடி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்