முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பன்சாலிடம் சி.பி.ஐ. இன்று விசாரணை

திங்கட்கிழமை, 13 மே 2013      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, மே.14 - ரயில்வேயில் இடம் மாறுதல் பெறுவதற்காக  ரூ.10 கோடி பேரம் பேசப்பட்டு ரூ.90 லட்சம் முன் பணத்தை லஞ்சமாகப் பெற்றபோது, முன்னாள் ரயில்வே அமைச்சர் பன்சாலின் உறவினர் விஜய்சிங்லா கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து சிபிஐ விசாரணை நடத்தி 9 பேரை கைது செய்தது. இன்த விவகாரத்தில் ரயில்வே அமைச்சக உயர் அதிகாரிகள் 4 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. சிபிஐ நடத்திய விசாரணையில் 

ரயில்வே ஊழல்களில் பன்சாலின் உறவினர் விஜய் சிங்லா சம்பந்தப்பட்டு இருப்பதற்கான போன் உரையாடல் ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மேலும் ரூ.10 கோடி லஞ்சம் கொடுக்க முன் வந்த மகேஷ்குமார் என்ற  அதிகாரி பன்சாலை மும்பையில் தனியாக சந்தித்து பேசி இருப்பது தெரியவந்துள்ளது. இது மத்திய அரசுக்கு  கடும் நெருக்கடியை கொடுத்தது.              

பன்சால் பதவி விலக வேண்டும்  என்று பாஜக போர்க்கொடி தூக்கியது. இதையடுத்து பன்சால் பதவி விலகினார். பன்சாலின் தனி உதவியாளர் மற்றும் அவரது அலுவலக அதிகாரிகள் 4 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அந்த விசாரணையில் லஞ்ச பரிமாற்றம் அனைத்தும் பன்சாலுக்கு தெரிந்தே நடந்துள்ளது தெரியவந்துள்ளது. எனவே பன்சாலை விசாரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் சிபிஐக்கு ஏற்பட்டுள்ளது. பன்சாலிடம் கேட்பகற்காக சுமார் 50 கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் தயாரித்து வைத்துள்ளனர். இதற்கு பதில் கூற வருமாறு பன்சாலுக்கு சிபிஐ கடிதம் எழுதியுள்ளது.

அதை ஏற்று சிபிஐயிடம் பன்சால் வாக்குமூலம் கொடுப்பார்.   

இன்று மாலைக்குள் விசரணையை முடிக்க சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

ரயில்வேயில் மட்டுமின்றி மற்ற ரயில்வே இடமாறுதல்கள்  மற்றும் பணி நியமனங்களிலும் பன்சாலின் உறவினர் விஜய் சிங்லா பல கோடி ரூபாய் லஞ்சமாக வாங்கியுள்ளார். அவரது டெலிபோன் உரையாடல் பற்றி விளக்கம் கேட்க சிபிஐ முடிவு செய்துள்ளது. விஜ்யசிங்லா, மகேஷ்குமார் ஆகியோரிடம் சிபிஐ ஏற்கெனவே சிபிஐ விசாரணை நடத்தி பல தகவல்களை திரட்டி வைத்துள்ளது.

ரயில்வே ஊழல் தொடர்பாக சுமார் 1000 டெலிபோன் உரையாடல்களை  சிபிஐ வைத்துள்ளது. அதில் சில வார்த்தைகளை பேசியது யார் என்று தெரியவில்லை.

அப்படி பேசியவரை கண்டுபிடிக்க அந்த கேசட்டுகளை பரிசோதனை கூடத்துக்கு சிபிஐ அதிகாரிகள் அனுப்பியுள்ளனர். இது பன்சாலுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் சண்டிகார் சென்ற அவர் நான் அப்பாவி. எனக்கும் லஞ்ச ஊழலுக்கும் தொடர்பு இல்லை என்றார். சிபிஐ விசாரணையை எதிர்கொள்ளத் தயார் என்றும் பன்சால கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்