முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கங்கையில் புனித நீராட விரும்பிய போப் ஆண்டவர் ஜான் பால்

வெள்ளிக்கிழமை, 29 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

திருச்சூர்,ஏப். - 30 - புனித கங்கையில் நீராட மறைந்த போப்பாண்டவர் இரண்டாம் ஜான் பால் விரும்பிய விஷயம் தற்போது வெளியாகி உள்ளது. ஆனால் அவரது விருப்பம் நிறைவேறாமல் போய்விட்டது.இந்தியாவின் வடக்கு அரணாக இருக்கும் இமயமலைப்பகுதியில் உருவாகி நாட்டிற்கு பெரும் பயனை அளித்துவரும் நதியாக கங்கை உள்ளது. இது ஒரு ஜீவநதியாகும். இதில் உலகம் முழுவதிலும் உள்ள கோடான கோடி இந்துக்கள் நீராடினால் புண்ணியம் என்று கருதுகிறார்கள்.
கங்கை நதியில் போப்பாண்டவர் இரண்டாம் ஜான் பால் புனித நீராட விருப்பம் தெரிவித்தது தற்போது தெரியவந்துள்ளது. கடந்த 1986-ம் ஆண்டு வாடிகனுக்கு கேரள மாநிலத்தை சேர்ந்த ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த மூத்த பாதிரியார் வாடிகனுக்கு சென்று போப்பாண்டவர் ஜான்பாலிடம் ஆசி பெற்றார். அதே ஆண்டு போப்பாண்டவர் இந்தியாவுக்கு வந்தார். அப்போது கங்கையில் புனித நீராட வேண்டும் என்று தனது விருப்பத்தை கேரள பாதிரியாரிடம் கூறினாராம். இதை கேரள மாநிலம் திருச்சூர் பேராயர் ஜோசப் குந்துகுலம் தெரிவித்ததாக திருச்சூர் துணைப்பிரிவு ஆலய பாதிரியார் மார் ராகேல் தத்தில் என்பவர் தெரிவித்துள்ளார். போப்பாண்டவர் ஜான்பால் புனிதமானவர் என்ற பட்டத்தை வாடிகன் வழங்க உள்ளதையொட்டி நாளை அவருக்கு கிறிஸ்தவ ஆலயங்களில் விசேஷ ஆராதனை நடைபெறுகிறது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony