முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சஞ்சய் தத் சரணடைய அவகாசம் கோரும் மனு தள்ளுபடி

செவ்வாய்க்கிழமை, 14 மே 2013      சினிமா
Image Unavailable

 

புதுடெல்லி,மே.15 - மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் மீதமுள்ள தண்டனை காலத்தை அனுபவிக்க கோர்ட்டில் சரணடைய கால அவகாசம் கோரும் சஞ்சய் தத் சார்பாக படத்தயாரிப்பாளர்கள் தாக்கல் செய்த மனுவையும் சுப்ரீம்கோர்ட்டு தள்ளுபடி செய்துவிட்டது. 

கடந்த 1993-ம் ஆண்டு நாட்டின் பொருளாதார நகரமான மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் 270 பேர் பலியானார்கள் மற்றும் 700-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த நாசவேலையை செய்வதற்காக பாகிஸ்தானில் இருந்து பயங்கர ஆயுதங்களும் வெடிமருந்து பொருட்களும் மும்பை நகருக்குள் தீவிரவாதிகள் கொண்டுவந்தன. அந்த மாதிரி கொண்டு வந்த ஆயுதங்களில் 9 எம்.எம். பிஸ்டல் மற்றும் ஏ.கே.56 ரக இயந்திர துப்பாக்கியானது சஞ்சய் தத் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மும்பை குண்டுவெடிப்புக்கும் பிரபல இந்தி நடிகரான சஞ்சய் தத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என்று கூறி அவர் மீது போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் தீவிரவாதத்திற்கும் சஞசய் தத்திற்கு தொடர்பு இல்லை என்றும் ஆனால் அவர் சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்தார் என்று அவருக்கு மும்பை தடாகோர்ட்டு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் சஞ்சய் அப்பீல் செய்தார். சுப்ரீம்கோர்ட்டும் 6 ஆண்டு தண்டனையை 5 ஆண்டு தண்டனையாக குறைத்தது. அவர் ஒன்றரை ஆண்டுகள் ஏற்கனவே சிறையில் இருந்துவிட்டார். மீதமுள்ள மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிக்க சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்தநிலையில் தாம் பல படங்களில் நடிப்பதாகவும் உடனடியாக நான் சரணடைந்தால் படத்தயாரிப்பாளர்களுக்கும் எனக்கும் அதிக நஷ்டம் ஏற்படும். அதனால் சரணடையும் கால அவகாசத்தை நீடிக்க வேண்டும் என்று சஞ்சய் தத் அப்பீல் செய்திருந்தார். இதை விசாரித்து சுப்ரீம்கோர்ட்டு தண்டனையை அனுபவிப்பதற்காக சரணடையும் கால அவகாசத்தை 4 வாரம் நீட்டித்தது. மேலும் நீடிக்க வேண்டும் என்று சஞ்சய் தத் மற்றொரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவை சுப்ரீம்கோர்ட்டு தள்ளுபடி செய்துவிட்டது. இதனையொட்டி சஞ்சய் தத்திற்கு கால அவகாசம் அளிக்கக்கோரி படத்தயாரிப்பாளர் ஒருவர் சுப்ரீம்கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று நீதிபதிகள் பி.எஸ். செளகான், தீபக் மிஸ்ரா ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அதை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்தனர். இதனால் சஞ்சய் தத் நாளை சரணடையலாம் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்