முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்க கட்டிட விபத்து: பலி எண்ணிக்கை 1127 ஆக உயர்வு

செவ்வாய்க்கிழமை, 14 மே 2013      உலகம்
Image Unavailable

 

டாக்கா, மே.15 - வங்காள தேசத்தில் 8 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த இடத்தில் 3 வாரங்களாக நடைபெற்று வந்த மீட்புப் பணி முடிவடைந்தது. இதுவரை 1127 பேர் இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டாக்காவிலிருந்து 30 கி.மீ. தொலைவில் சவர் நகரம் உள்ளது. இங்கு ராணா பிளாசா என்ற 8 மாடிக் கட்டிடம் இருந்தது. 4 மாடிகளில் ஆடை உற்பத்தி தொழிற்சாலைகளும், மற்ற பகுதிகளில் மார்க்கெட், பிராக் வங்கிக் கிளை உள்ளிட்ட பல கடைகள் இயங்கி வந்தன.

  கடந்த மாதம் 24-ம் தேதி காலை இந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. அப்பகுதி மக்கள் உதவியுடன் போலீஸார், தீயணைப்பு வீரர்கள், ராணுவ வீரர்கள் என பல்வேறு தரப்பினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். முதலில் 80 பேர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. பின்னர் சாவு எண்ணிக்கை அதிகரித்தது. 

இதற்கிடையே விபத்து நடந்த 3-வது நாளில்  மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டன. இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்கள் சடலங்கள் அகற்றப்பட்டதாகவும், உள்ளே யாரும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கட்டிட இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி 17 நாள்களாக உயிருடன் போராடிய ரோஷ்மா என்ற பெண் கடந்த வாரம் மீட்கப்பட்டார். இதையடுத்து மீட்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டது. கட்டிட விபத்தில் சிக்கி இதுவரை 1127 பேர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. 

அனுமதி பெறாமல் கூடுதல் தளங்கள் கட்டப்பட்டதும், அங்கு அதிக எடை கொண்ட ராட்சத இயந்திரங்கள் நிறுவப்பட்டதும்தான் விபத்துக்குக் காரணம் என்று தெரிய வந்தது. இதுதொடர்பாக கட்டிட உரிமையாளர் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago