முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியர்களுக்கு முன்னுரிமை விசா: பிரிட்டன்

புதன்கிழமை, 15 மே 2013      இந்தியா
Image Unavailable

 

லண்டன், மே.16 - இந்தியாவில்  இருந்து  அவசரமாக  பிரிட்டன்  செல்ல விரும்புவோருக்கு   முன்னுரிமை  விசாக்களை  அளிக்கும்  சேவையை  பிரிட்டன் அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்தியர்களுக்கு விசாவைக் கேட்ட நாளிலேயே  அளிக்கும் முறையை  அமல்படுத்தப்போவதாக  பிரிட்டன்  பிரதமர்  டேவிட் கேமரூன், கடந்த  பிப்ரவரி  மாதம்  இந்தியப் பயணம்  மேற்கொண்டிருந்த போது அறிவித்தார்.  இதன்படி, இந்தியாவில் உள்ள பிரிட்டன்  உள்துறை  அலுவலகங்களில்  இந்தச் சேவை  செவ்வாய்க்கிழமை  தொடங்கியது.  இவ்வாறு முன்னுரிமை விசாக்களை பிரிட்டன் அளிப்பது இதுவே முதல் முறை என்பது  குறிப்பிடத்தக்கது. இது குறித்து  இந்தியாவுக்கான பிரிட்டன் தூதர் ஜேம்ஸ் பெவன் கூறியது:

வேறு எந்த நாட்டுக்கும்  முன்பாக, இந்தியாவில்  சிறப்பு முன்னுரிமை  விசாக்கள் வழங்கும் சேவை தொடங்கப்பட்டது மகிழ்ச்சி தருகிறது.  பிரிட்டன்  செல்ல விரும்பும்  இந்தியர்கள்  முதன்முறையாக விசா கோரிய அதே நாளில்  அதைப் பெற உள்ளனர்.  ஏற்கெனவே அளிக்கப்பட்டு  வரும் விசா சேவையை  மேலும் சிறப்பானதாக மாற்ற வேண்டும்  என்ற எங்கள்  அர்ப்பணிப்பை  இது உணர்த்துகிறது. இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள   புதிய சேவை,  வர்த்தகத்துக்கு  பெரிதும்  பயனுள்ளதாக அமையும்.  இந்த வாய்ப்பை இந்தியத் தொழில்  முனைவோரும், வர்த்தகர்களும்  பயன்படுத்திக் கொள்வார்கள். என்று நம்புகிறோம். இரு தரப்பு வர்த்தகத்தை 2015 ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்க  இந்தியாவும், பிரிட்டனும் திட்டமிட்டுள்ளன. இந்த இலக்கை  எட்ட புதிய  முன்னுரிமை விசா சேவை  உதவும் என்றார் ஜேம்ஸ் பெவன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago