முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விமானிகள் ஸ்டிரைக் - 60 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து

வியாழக்கிழமை, 28 ஏப்ரல் 2011      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி, ஏப்.29 - விமானிகள் நேற்று 2-வது நாளாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால் ஏர் இந்தியாவின் 60 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் பல விமானங்கள் தாமதமாக புறப்பட்டும் வந்தும் சேர்ந்தன. தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஏர் இந்தியா விமானிகள் போராட்டங்களை நடத்தினர். ஆனால் இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில் இந்த போராட்டத்தை விமானிகள் தொடர்ந்து நடத்தி வந்தனர். இதை அடுத்து இந்த விமானிகள் சங்கத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. 

இதற்கு கண்டனம் தெரிவித்து ஏர் இந்தியா விமானிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஏர் இந்தியா விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இதை அடுத்து டெல்லி ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு ஏர் இந்தியா விமானிகள் அனைவரும் பணிக்கு  திரும்ப வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

ஆனால் விமானிகள் நேற்று தொடர்ந்து இரண்டாவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதை அடுத்து 60 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து  செய்யப்பட்டன.

டெல்லியில் மட்டும் 33 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

காத்மண்டு, துபாய், காபூல் போன்ற நகரங்களுக்கு செல்லும் 5 சர்வதேச விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. 

தற்போது கிடைக்கக் கூடிய விமானிகள் மற்றும் விமான சிப்பந்திகளை வைத்துக்கொண்டு எவ்வளவு விமானங்களை இயக்க முடியுமோ அவ்வளவு விமானங்களை மட்டுமே ஏர் இந்தியா இயக்கி வருகிறது.

இதே போல மும்பையில் 19 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இந்த தகவல்களை ஏர் இந்தியா அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்