முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.பி.ஐ.க்கு தன்னாட்சி வழங்க குழு அமைத்தது கண்துடைப்பு

வியாழக்கிழமை, 16 மே 2013      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, மே.17   - சி.பி.ஐ. அமைப்புக்கு தன்னாட்சி அதிகாரம்  வழங்குவது  குறித்து ஆராய மத்திய அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டிருப்பது  கண்துடைப்பு  நடவடிக்கை என்று பா.ஜ.க.  விமர்சித்துள்ளது. சொராபுதீன் போலி என்கவுன்ட்டர்  வழக்கில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க.  மூத்த தலைவரும்,  மாநில சட்டப்பேரவை  எதிர்க்கட்சித் தலைவருமான  குலாப் சந்த் கட்டாரியா  மீது சி.பி.ஐ செவ்வாய்க்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.  

இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ.க.  தேசியத்தலைவர்  ராஜ்நாத்சிங், மூத்த தலைவர் அருண்ஜேட்லி  ஆகியோரை அக்கட்சியின்  ராஜஸ்தான் மாநிலத் தலைவர்  வசுந்தரா ராஜே செவ்வாய்க்கிழமை டெல்லியில்  சந்தித்துப் பேசினார். அதன் பின் ராஜ்நாத்சிங் செய்தியாளர்களிடம் கூறியது:

கட்டாரியா மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் 

நாங்கள் நிராகரிக்கிறோம். அவருக்கு ஆதரவாக  நாங்கள் இருக்கிறோம். இந்த விவகாரத்தில் சி.பி.ஐ.  மற்றும் காங்கிரஸின்

முயற்சிகளை  எங்கள் கட்சி சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அம்பலப்படுத்தும். இது போன்ற வழக்குகள் அனைத்தும் நன்கு திட்டமிடப்பட்ட சதியின் ஒரு பகுதிதான் என்றார் ராஜ்நாத்சிங். அப்போது அவருடன் இருந்த அருண் ஜேட்லி  செய்தியாளர்களிடம் கூறியதாவது: கட்டாரியா மீது எந்த அடிப்படையும் இல்லாமல் சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.  அவர்  நேர்மைக்கும் நம்பகத்தன்மைக்கும்  பெயர் பெற்றவர். அவருக்கு எதிராக  உண்மையான  ஆதாரம் ஏதுமில்லை.  காங்கிரஸின் தூண்டுதலின் பேரில், பா.ஜ.க. மூத்த தலைவர்களைச் சிக்க வைக்க வேண்டும் என்பதற்காக  சி.பி.ஐ.   இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளது. பா.ஜ.க. தலைவர்  ஒருவரைச் சிக்க வைக்க சி.பி.ஐ. செய்யும்  மூன்றாவது  முயற்சியாகும்.  ஏற்கெனவே, இதே சொராபுதீன் என்கவுன்ட்டர் வழக்கில் குஜராத்  முன்னாள் அமைச்சர் அமித் ஷாவையும், மற்றொரு  என்கவுன்ட்டர்  வழக்கில்  ராஜேந்திர  ராத்தோரையும் வழக்கில்  சிக்க வைத்தனர். அமித் ஷா மூலமாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியையும் வழக்கில் சிக்க வைக்க சி.பி.ஐ.  2010 இல் முயன்றது. அதே வேளையில், முன்னாள் ரயில்வே அமைச்சர் பவன்குமார்  பன்சாலுக்கு எதிரான ஆதாரங்கள்  100 மடங்கு  அதிகமாக  இருந்தும் அவரிடம் மென்மையான போக்கை சி.பி.ஐ. கடைப்பிடிக்கிறது. சி.பி.ஐ.க்கு தன்னாட்சி  அதிகாரம் வழங்குவது குறித்து  ஆராய மத்திய  அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டிருப்பது  கண்துடைப்பு நடவடிக்கை தான்ா என்றார். 

அரசு மறுப்பு: எதிர்க்கட்சியினர்  சிபிஐ விசாரணைக்கு  உள்ளாகும்  போதெல்லாம் அந்த அமைப்பைக் குறை  கூறுவது  வாடிக்கையான  விஷயம் என்று  மத்திய உள்துறை  அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே  கூறினார்.  ராஜஸ்தான்  மாநில  பாஜக மூத்த தலைவர்  குலாப் சந்த்  கட்டாரியா  மீதான குற்றச்சாட்டுக்கு  உரிய ஆதாரங்கள்  உள்ளன.

சொராபுதீன் போலி என்கவுன்ட்டர்  வழக்கில்  அவருக்குத் தொடர்பு இருப்பதற்கான தெளிவான  ஆதாரங்கள் உள்ளன. இதை மறைப்பதற்காகவே சிபிஐ மீது அவர்கள் குறை கூறுகின்றனர் என்றார் ஷிண்டே.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்