முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்.கில் சரப்ஜித்சிங்கின் வழக்கறிஞர் கடத்தப்பட்டு விடுதலை

வியாழக்கிழமை, 16 மே 2013      உலகம்
Image Unavailable

லாகூர், மே.17  - பாகிஸ்தான் சிறையில் தண்டனை அனுபவித்து வந்த இந்திய கைதி சரப்ஜித்சிங்குக்கு ஆதரவாக கோர்ட்டில் வாதாடிய வழக்கறிஞர் அவாய்ஸ் ஷேக், அவரது மகன் ஆகியோர்  கடத்தப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். பாகிஸ்தான்  சிறையில் சக கைதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த சரப்ஜித்சிங்குக்கு இவர் கோர்ட்டில் ஆஜராகி வாதாடி வந்தார். இந்நிலையில் சரப்ஜித்சிங் இறந்ததை அடுத்து வழக்கறிஞர் ஷேக்கும், அவரது மகனும், நிலம் வாங்குவதற்காக காரில் சென்றபோது கடத்தப்பட்டனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

 நேற்று அவர்கள் இருவரும் காரில் சென்றனர். அப்போது மோட்டார் சைக்கிளில் போலீஸ் உடை அணிந்து வந்த இருவர் இவர்களை வழிமறித்ததாக ஷேக்கின் மற்றொரு மகன் ஹாரூன் தெரிவித்தார். பின்னர் அவர்கள் இருவரும் ஷேக்கையும், அவரது மகனையும் காரில் கடத்திச் சென்றனர். பின்னர் ஷேக் நிருபர்களிடம் பேசுகையில், எங்களை கடத்தியவர்கள், எங்களை தாக்கிய பிறகு, காரிலிருந்து தூக்கி கீழே வீசினர். பின்னர் நானும், எனது மகனும் அங்கு வருபவர்களிடம் உதவி கேட்டோம். சாலையில் வந்தவர்கள் இதுபற்றி போலீஸாரிடம் தெரிவித்தனர் என்றார். இந்த கடத்தல் சம்பவத்துக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. 

இந்த மாதம் 2-ம் தேதி லாகூரிலுள்ள கோட் லக்பாட் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சரப்ஜித்சிங் சக கைதிகளால் தாக்கப்பட்டதில் காயமடைந்து, பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தார். சரப்ஜித்சிங் வழக்கில் ஆஜரானதால் இவரை சிலர் மிரட்டியுள்ளனர். சரப்ஜித்சிங்குக்காக நான் வாதாடியதால் எனக்கு அடிக்கடி மிரட்டல் வந்தது என்று ஷேக் தெரிவித்தார். பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப் மாகாணத்தில் 1990-ல் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சரப்ஜித்சிங்குக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து அவர் சிறையில்  தண்டனை அனுபவித்து வந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago