கட்சி தலைவர்களுடன் ராகுல் காந்தி சந்திப்பு

வியாழக்கிழமை, 16 மே 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, மே.17 - காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி இங்குள்ள பிர்லா அரங்கத்தில் கட்சியின் முக்கிய தலைவர்களை சந்தித்துப் பேசினார். 

முதலாவது சந்திப்பில், 25 மாவட்டங்களிலுள்ள காங்கிரஸ் கமிட்டித் தலைவர்கள், அலுவலக நிர்வாகிகள் ஆகியோரை சந்தித்துப் பேசினார். அதன் பிறகு 2-வது சந்திப்பில் பஞ்சாயத்து ராஜ், உள்ளாட்சி தேர்தல்களில் வெற்றிபெற்ற பிரதிநிதிகள் ஆகியோரை சந்தித்து உரையாடினார்.

3-வது சந்திப்பில் பிரதேச தாங்கிரஸ்,  செயற்குழு உறுப்பினர்கள், அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள், மேயர்கள், தற்போது கட்சியில் பதவியில் உள்ளவர்கள் ஆகியோரையும் அவர் சந்தித்தார்.

  கட்சியில் தற்போது உள்ள நிலைமை, மாநிலங்களில் கட்சியின்   அரசியல் நிலைமை என்ன, எப்படி உள்ளது என்பதை அவர்களிடம் கேட்டு அவர் தெரிந்து கொண்டார். இதில் 3 ஆயிரம் பேர் கலந்து

கொண்டனர் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்: