முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேபாளத்தில் விமான விபத்து: 22 பேர் காயம்

வியாழக்கிழமை, 16 மே 2013      உலகம்
Image Unavailable

 

காத்மாண்டு,மே.17  - நேபாளத்தில் நேற்றுக்காலையில் ஏற்பட்ட விமான நிலையத்தில் 22 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. நேபாளத்தின் பொஹரா விமானநிலையத்தில் இருந்து இரட்டை என்ஜினை கொண்ட விமானம் ஒன்று சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு ஜோம்ஜம் விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றது. இது நேபாளத்தின் மேற்கு பகுதியில் உள்ளது. விமானத்தில் ஜப்பான் நாட்டை சேர்ந்த 7 சுற்றுலா பயணிகள், நேபாளத்தை சேர்ந்த 11 பயஙூணிகள் மற்றும் விமான ஊழியர்கள் 3 பேர் சென்றனர். விமானமானது நேற்றுக்காலையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு ஜோம்ஜம் நகர விமான நிலையத்தை நோக்கி சென்றது. விமானம் புறப்பட்ட 20 நிமிடத்தில் இந்த விமானம் விபத்துக்குள்ளானது. கடந்தாண்டு இதே ஜோம்ஜம் நகர் அருகே உள்ள மலைப்பகுதியில் ஒரு விமானம் விபத்துக்குள்ளானது. இதில் இந்திய சுற்றுலா பயணிகள் 13 உள்பட 15 பேர் பலியானார்கள். 

நேற்று ஏற்பட்ட விமான விபத்தானது கலிகன்டகி நதிக்கரையில் விபத்துக்குள்ளானது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நதியானது ஜோம்ஜம் நகருக்கு அருகில் உள்ளது. விமானமானது பைலட் கட்டுப்பாட்டை மீறி செல்லவே விமானத்தை தரையிறக்க விமானி முயற்சி செய்தார். அப்போது தரையில் மோதி விமானம் விபத்துக்குள்ளானதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதில்  2 பைலட்கள், ஒரு விமான பணிப்பெண், ஜப்பானிய சுற்றுலா பயணிகள் 2 பேர் உள்பட 22 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் உடனடியாக மற்றொரு விமானம் மூலம் பொஹ்ரா நகருக்கு கொண்டு செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்