இந்திய மாணவியை கற்பழித்துக் கொன்றவருக்கு சிறை

வெள்ளிக்கிழமை, 17 மே 2013      இந்தியா
Image Unavailable

மெல்போர்ன், மே. 18  - ஆஸ்திரேலியாவில் படித்து வந்த இந்திய மாணவி தோஷா தாக்கரை கற்பழித்துக் கொன்ற 21 வயது ஆஸ்திரேலியருக்கு 45 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்துள்ளது. ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னியில் உள்ள க்ராய்டனின் எட்வின் தெருவில் உள்ள வீட்டில் தங்கி படித்து வந்தவர் இந்தியரான தோஷா தாக்கர்(24). அவர் வீட்டுக்கு அருகில் வசித்து வந்தவர் ஆஸ்திரேலியரான டேனியல் ஸ்டானி-ரெஜினால்ட்(21). அவர் கடந்த 2011 ம் ஆண்டு மார்ச் 21 ம் தேதி தோஷா தாக்கரை அவர் வசிப்பிடத்திற்கே சென்று கற்பழித்தார். பின்னர் கேபிள் வயரை வைத்து தாக்கரின் கழுத்தை நெறித்துக் கொன்று அவரது உடலை சூட்கேஸில் வைத்து பாராமடா நதி அருகே உள்ள கால்வாயில் வீசிவிட்டார். மெடோபேங்க் பார்க் அருகே உள்ள கால்வாயில் ஒரு சூட்கேஸ் மிதப்பதை அங்கு இருந்த பணியாட்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து அதை எடுத்து திறந்து பார்த்தபோது உள்ளே தாக்கரின் உடல் இருந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் டேனியலை கைது செய்தனர். டேனியல் இந்த கொடூரத்தை செய்தபோது அவருக்கு வெறும் 19 வயது தான். அவர் இந்த பாதகச் செயலை திட்டமிட்டு செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நியூ சவுத் வேல்ஸ் உச்ச நீதிமன்ற நீதிபதி டெரக் பிரைஸ் டேனியலுக்கு 45 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தார். மேலும் அவர் 30 ஆண்டுகள் தண்டனைக்கு பிறகே பரோலில் வெளியே வர முடியும். அதாவது 2041 ல் தான் டேனியல் பரோலில் வர முடியும்.

இதை ஷேர் செய்திடுங்கள்: