அதிபர் ஒபாமா அழைப்பு: பிரதமர் அமெரிக்கா பயணம்

சனிக்கிழமை, 18 மே 2013      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, மே. 19  - அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா விடுத்த அழைப்பின் பேரில் இன்னும் சில மாதங்களில் பிரதமர் மன்மோகன்சிங் வாஷிங்டன் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக அமெரிக்க வெளியுறவு துணை அமைச்சர் வில்லியம் பேன்ஸ் சமீபத்தில் டெல்லி வந்திருந்த போது ஒபாமா விடுத்த அழைப்பு பற்றி பிரதமர் மன்மோகன்சிங்கிடம் தெரிவித்தார். அப்போது ஒபாமாவின் அழைப்பை பிரதமர் மன்மோகன்சிங் ஏற்றுக் கொண்டார். இதை தொடர்ந்து அவர் விரைவில் வாஷிங்டன் செல்வார் என்று டெல்லியில் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அமெரிக்கா செல்லும் பிரதமர் மன்மோகன்சிங் அங்கு ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒபாமா பதவியேற்ற பிறகு பிரதமர் மன்மோகன்சிங் அமெரிக்கா செல்வது இது 2 வது முறை என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது இரு தரப்பு உறவு குறித்து இரு தலைவர்களும் பேச்சு நடத்துவார்கள் என்றும் தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: