பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப மறுப்பு: ம.உ.க. நோட்டீஸ்

சனிக்கிழமை, 18 மே 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,மே.19   - ஹரியானா மாநிலத்தில், கிராம மக்கள் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப மறுப்பது தொடர்பாக விளக்கம் தருமாறு ஹரியானா மாநில தலைமைச் செயலாளர், ஐஜி ஆகியோரை  தேசிய மனித உரிமைகள் கமிஷன் கேட்டுக்கொண்டுள்ளது.

ஹரியானா மாநிலத்தில், மகேந்தர்கார் என்ற மாவட்டத்தில் உள்ள 6 கிராம ஊராட்சிகளைச் சேர்ந்த மக்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து வருகின்றனர். பள்ளியில் குழந்தைகளை சிலர் கேலி கிண்டல் செய்து வருகின்றனர். எனவே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில்லை என்று கிராம மக்கள் முடிவுசெய்துள்ளனர். இதுபற்றி பத்திரிகைகளில் செய்து வந்ததுள்ளது. 

இதையடுத்து  ஹரியானா மாநில தலைமைச் செயலாளர், போலீஸ் ஐ.ஜி. ஆகியோர் 4 வாரங்களுக்குள் தகுந்த விளக்கம் தருமாறு தேசிய மனித உரிமைகள் கமிஷன் கேட்டுக்கொண்டுள்ளது.  தேசிய மனித உரிமைகள் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: