முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனாட்சி அம்மன் கோயில் வரலாற்று ஆவணப்படம் வெளியீடு

சனிக்கிழமை, 30 ஏப்ரல் 2011      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை,ஏப். - 30 - மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் குறித்த வரலாற்று ஆவணப் படம் வெளியிடப்படவுள்ளது.சுமார் 45 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த ஆவணப்படம் குறுந்தகடாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் மீனாட்சி அம்மன் கோயில் வரலாறு, அதன் பழங்கால அமைப்பு, தற்போதைய நிலை மற்றும் திருவிழாக்கள், அவற்றின் முக்கியத்துவம் என பல முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. காட்சிகளாகவும், பின்னணியில் கோயில் வரலாற்றை விளக்கும் வகையிலும் இந்த ஆவணப்படம் உள்ளது. இது திருக்கோயிலுக்கு முதன் முறையாக வருவோருக்கும், வெளி மாநில மற்றும் வெளிநாட்டவருக்கும் மிகவும் பயனுடையதாகவும் இருக்கும் என கோயில் வட்டாரங்கள் தெரிவித்தன.
திருக்கோயில் நிர்வாக அலுவலர் பத்மநாபன் மற்றும் கோயில் அறங்காவலர் குழுவினர் முயற்சியால் இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை திருக்கோயில் நிர்வாக அலுவலராக இருந்த போது அக்கோயில் ஆவணப்படத்தை பத்மநாபன் வெளியிட்டார். தற்போது மீனாட்சி அம்மன் திருக்கோயில் குறித்து ஆவணப்படத்தை அவர் வெளியிட உள்ளதாகவும் கோவில் வட்டாரங்கள் தெரிவித்தன.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்