முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக். சிறையிலிருந்த 51 இந்திய மீனவர்கள் விடுவிப்பு

சனிக்கிழமை, 18 மே 2013      இந்தியா
Image Unavailable

 

இஸ்லாமாபாத், மே.19  - பாகிஸ்தான் சிறையிலிருந்த  51 இந்திய மீனவர்களை நல்லெண்ண அடிப்படையில்  விடுதலை  செய்ய நடவடிக்கை  எடுத்துள்ளதாக  அந்நாட்டு பிரதமர் அலுவலகம்  வெளியிட்டுள்ள  அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக  பாகிஸ்தான்  பிரதமர்  அலுவலகம்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:  ாபாகிஸ்தான் சிறையிலிருந்த  51 இந்திய மீனவர்களை  விடுவிக்க  இடைக்கால அரசின் பிரதமர்  மிர் ஹஸர் கான் கோசோ  நடவடிக்கை  எடுத்துள்ளார். நல்லெண்ண அடிப்படையில்  

இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தங்களின்  தண்டனை காலத்தை நிறைவு செய்து விட்டனர். பாகிஸ்தானின் இந்நடவடிக்கையை தொடர்ந்து, இந்தியாவில் உள்ள சிறைகளில்  இருக்கும் பாகிஸ்தான் மீனவர்களை விடுவிக்க பிரதமர் மன்மோகன்சிங் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம்ா என்று 

தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சட்டத்துறை அமைச்சர் பிலால் சூபி, சிந்து  மாகாண  முதல்வர்  ஜாகித் குர்மான்  ஆல்வி, வெளியுறவு, உள்துறை  மற்றும்  சட்டத்துறை  அமைச்சர்கள், பிரதமர் அலுவலக  செயலாளர்  ஆகியோர்  பங்கேற்ற  கூட்டத்தில் இந்திய  மீனவர்களை  விடுவிக்கும்  முடிவு எடுக்கப்பட்டது.  இப்போது  பாகிஸ்தான் சிறைகளில் 482 இந்தியர்களும், இந்திய சிறைகளில்  496 பாகிஸ்தானியர்களும் உள்ளனர்.  மே முதல் வாரத்தில் பாகிஸ்தானின்   லாகூர் சிறையில்  இருந்த இந்தியர் சரப்ஜித் சிங்,  சக கைதிகளால்  தாக்கப்பட்டு  உயிரிழந்தார்.  அதைத் தொடர்ந்து  

இந்தியாவின் ஜம்முவில் உள்ள சிறையில்  பாகிஸ்தானியர் சனாவுல்லா, சக கைதியொருவரால்  தாக்கப்பட்டு  உயிரிழந்தார். இச்சம்பவங்களைத் தொடர்ந்து  இருநாடுகளுக்கு  இடையேயான  உறவு பாதிக்கப்பட்டது. இதையடுத்து நல்லெண்ண நடவடிக்கையாக  சிறையிலிருந்த இந்திய மீனவர்களை விடுவிக்க பாகிஸ்தான்  அரசு முடிவு செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்