முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்பாட் பிக்சிங்: திரிவேதி உட்பட 8 பேருக்கு தொடர்பா?

சனிக்கிழமை, 18 மே 2013      விளையாட்டு
Image Unavailable

 

புது டெல்லி, மே. 19 - ஐ.பி.எல். 6 வது தொடரில் ஸ்பாட் பிக்சிங்கில் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட கிரிக்கெட் 3 வீரர்கள் சிக்கியிருக்கும் நிலையில் மேலும் 8 வீரர்கள் விசாரணை வளையத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஸ்பாட் பிக்சிங்கில் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட வீரர்கள் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் மேலும் 8 வீரர்களும் விசாரணை வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளனர். இவர்களில் கூப்பர், பிராட் ஹட்ஜ், சித்தார்த் திரிவேதி ஆகியோர் பெயர் மட்டும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மற்ற 5 வீரர்களின் பெயர்கள் உறுதிப்படுத்தப்படவில்லை.

மும்பையைச் சேர்ந்த சந்திரேஷ் படேல் என்ற புக்கி, கிரிக்கெட் வீரர்களுக்கு விருந்து ஏற்பாடு செய்து அதில் ஸ்பாட் பிக்சிங்கில் ்ஈடுபடுவதற்கான தொகையை பேச திட்டமிட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. 

இதற்காக மும்பையில் கடந்த மாதம் நடந்த ஒரு பார்ட்டியில் பல வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் எவரும் வரவில்லை. இதேபோல் ஏப்ரல் 6 ம் தேதி அரியானாவின் மானேசரிலும் ஏப்ரல் 8 ம் தேதி ஜெய்ப்பூரிலும் புக்கிகளின் விருந்து நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஜெய்ப்பூர் பார்ட்டியில் சாண்டிலா, சவானை புக்கிகளுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். இந்த விவகாரங்களில் ராஜஸ்தான் ராயல்ஸின் முன்னாள் வீரரான அமீத் சிங் முக்கியப் பங்கு வகித்திருப்பதாகவும் தெரிகிறது. இதனால் சந்தேகப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 8 வீரர்களை விசாரிக்கவும் டெல்லி போலீசார் முடிவு செய்திருக்கின்றனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த டெல்லி போலீசார், இந்த 8 வீரர்களையும் நேரடியாக அல்லது மறைமுகமாக புக்கிகள் தொடர்பு கொண்டனரா என்பது குறித்து விசாரணையில்தான் தெரியவரும். மற்ற 5 வீரர்களின் பெயர்கள் புக்கிகளிடம் நடத்தப்படும் விசாரணைக்குப் பிறகே தெரிய வரும்.. இந்த விவகாரம் தொடர்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர் ஷில்பா ஷெட்டி அல்லது ராஜ் குந்த்ரா அல்லது கேப்டன் ராகுல் டிராவிட்டை விசாரிக்க வேண்டிய தேவை இல்லை. .அவர்களுக்கு இதில் எந்த பங்கும் இல்லை என்றார்.

இதனிடையே ஸ்ரீசாந்த், சாண்டிலா, சவான் ஆகிய மூவருமே தாங்கள் ஸ்பாட் பிக்சிங்கில் ்ஈடுபட்டதை ஒப்புக் கொண்டு தாங்கள் தவறு செய்து விட்டதாகக் கூறியிருக்கின்றனர் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் இதை ஸ்ரீசாந்தின் வழக்கறிஞர் தீபக் பிரகாஷ் நிராகரித்திருக்கிறார். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவை டெல்லி போலீஸ் கமிஷனரும் டெல்லி போலீஸ் அதிகாரிகளும் சந்தித்தனர். அவர்களுக்கு ஷிண்டே வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago