முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். சூதாட்டம்: வீரர்களை விசாரிக்க குழு: தலைவர்

ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, மே. 20 - 6-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற ஸ்பாட்பிக்சிங் சூதாட்டம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீட் சவான் ஆகிய 3 வீரர்கள் ஹஸ்பாட்பிக்சிங்ா சூதாட்டத்தில் ்ஈடுபட்டனர்.

 அவர்களை டெல்லி போலீசார் கடந்த 16-ந்தேதி கைது செய்தனர். இவர்கள் சுதைாட்ட தரகர்களுடன் தொடர்பு வைத்து பணம் வாங்கியதை டெல்லி போலீசார் செல்போன் உரையாடல் மூலம் ஆதாரத்துடன் கண்டு பிடித்தனர்.

போலீஸ் விசாரணையில் அவர்கள் தங்களது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர். ராஜஸ்தான் ஆடிய 3 ஆட்டம் ஸ்பாட்பிக்சிங் செய்யப்பட்டது. இதேபோல ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த முன்னாள் வீரர் அமித் சிங்கும் கைது செய்யப்பட்டுள்ளார். வீரராக இருந்த அவர் சூதாட்ட தரகராக மாறி இருந்தார்.

இந்த ஸ்பாட்பிக்சிங் விவகாரத்தால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) , ஸ்ரீசாந்த், சண்டிலா, சவான் ஆகியோரை விசாரணை முடியும் வரை ஹசஸ்பெண்டு செய்தது. ஐ.பி.எல். சூதாட்ட சர்ச்சை தொடர்பாக விவாதிக்க இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அவசர செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது.

பார்க் ஷெரட்டான் நட்சத்திர ஓட்டலில் காலை 11 மணிக்கு இந்த கூட்டம் தொடங்கியது. சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் கிரிக்கெட் வாரிய தலைவர் என்.சீனிவாசன், ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லா, அனில் கும்ப்ளே, அருண் ஜேட்லி மற்றும் 28 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவு தலைவர் ரவி சவானியும் கலந்து கொண்டார். 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகிகளும் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். கூட்டத்தில் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈ்டுபட்ட ஸ்ரீசாந்த், அஜீத் சண்டிலா, அங்கீட் சவான் ஆகிய 3 வீரர்கள் மீதும் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. கூட்டம் முடிந்ததும் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் என்.சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சூதாட்டத்தில் சிக்கிய 3 வீரர்கள் மீதான நடவடிக்கை பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. வீரர்களை குறிப்பிட்ட அளவுக்கு தான் கிரிக்கெட் வாரியத்தால் கட்டுப்படுத்த முடியும். போலீசார் போல் சூதாட்ட தரகர்களை  கட்டுப்படுத்தும் அதிகாரம் எங்களுக்கு இல்லை. வீரர்களின் பேராசையே ஊழலுக்கு காரணம்.

சூதாட்ட புகார் குறித்து விசாரிக்க கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவு தலைவர் ரவி சவானி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்வார்கள். அதன் அடிப்படையில் வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணைக்கு பிறகே வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். தவறு செய்த வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்க கிரிக்கெட் வாரியம் தயங்காது. அனைத்து ஐ.பி.எல். அணிகளிலும் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்.

சூதாட்டம் தொடர்பான அனைத்து விவகாரங்களையும் டெல்லி போலீசாரிடம் கேட்டுள்ளோம். குற்றசாட்டில் சிக்கிய 3 வீரர்கள் மீதும் புகார் செய்ய ராஜஸ்தான் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. போட்டியின் போது வீரர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறைக்கப்படும்.இவ்வாறு என்.சீனிவாசன் கூறினார்.

இதற்கிடையே சூதாட்டத்தில் சிக்கிய ஸ்ரீசாந்த், சண்டிலா, சவான் ஆகிய 3 வீரர்கள் மீதும் வழக்கு தொடர ராஜஸ்தான் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்