முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிக்ஸிங்: விசாரணை அதிகாரியை அறிவித்தது பி.சி.சி.ஐ.

ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, மே. 20 - ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் 3 பேர் தொடர்பான ஸ்பாட் பிக்ஸிங் புகார் குறித்து ரவி சவானி விசாரிப்பார் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மேலும் ஐ.பி.எல். அணிகளைச் சேர்ந்த அத்தனை வீரர்களின் ஏஜென்டுகளும் தங்களது பெயர் விவரங்களை உடனடியாக கிரிக்கெட் வாரியத்திடம் பதிவு செய்யுமாறும் கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது. கிரிக்கெட் வாரியத்தின் செயல் கமிட்டியின் அவசரக்கூட்டம் நேற்று சென்னையில் கூட்டப்பட்டிருந்தது. அதில் ஐ.பி.எல். ஸ்பாட் பிக்ஸிங் சர்ச்சை குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்தக்கூட்டத்தில், ஐ.சி.சி. யின் ஊழல் எதிர்ப்பு மற்றும் பாதுகாப்புப் பிரிவின் தலைவர் ஒய்.பி. சிங், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோரும் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் வாரியத் தலைவர் என்.சீனிவாசன் பேசுகையில், 

ரவி சவானி ஐ.பி.எல். ஸ்பாட் பிக்ஸிங் புகார் குறித்து விசாரிப்பார். வாரியத்திடம் தனது அறிக்கையை சமர்ப்பிப்பார்.

வீரர்களின் ஏஜென்டுகள் தங்களை வாரியத்திடம் பதிவு செய்து அங்கீகாரம் பெற வேண்டும். உடனடியாக இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது. சர்ச்சையில் சிக்கியுள்ள 3 வீரர்களுக்கு எதிராகவும் போலீஸில் புகார் தர ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக எங்களிடம் தெரிவித்தனர் என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்