முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய-அமெரிக்க உள்துறைஅமைச்சர்கள் பேச்சுவார்த்தை

ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,மே.20 - இந்திய-அமெரிக்க உள்துறை அமைச்சர்கள் இடையே இன்று வாஷிங்டன்னில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்த பேச்சுவார்த்தையின்போது தீவிரவாதத்தை ஒடுக்குவது குறித்து முக்கிய இடம் பெறும் என்று தெரிகிறது. இந்தியாவில் மட்டுமல்லாது அமெரிக்காவிலும் தீவிரவாதம் பரவி வருகிறது. பாஸ்டன் நகரில் நடந்த மார்த்தான் ஓட்டப்பந்தயத்தின்போது குண்டுவெடித்ததில் பலர் பலியானார்கள். இந்த சம்பவத்தையொட்டி தீவிரவாதத்தை ஒழிப்பது குறித்து இந்தியாவும்-அமெரிக்காவும் கூட்டு நடவடிக்கையை தீவிரப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை இன்று வாஷிங்டன் நகரில் நடைபெறுகிறது. பேச்சுவார்த்தைக்காக நேற்று அதிகாலையில் இந்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் 12 பேர் கொண்ட உயர்மட்டக்குழுவும் செல்கிறது. இந்த குழுவில் உள்துறை செயலாளர் சிங், உள்துறை உயரதிகாரி அனில் கோஸ்வாமி உள்பட மற்றும் பலர் இடம் பெற்றுள்ளனர். இன்று வாஷிங்டன்னில் அமெரிக்க உள்துறை அமைச்சர் ஜெனத் நபோலிடனோவை சுஷில் குமார் ஷிண்டே சந்தித்து பேசுகிறார். அப்போது லஷ்கர்-இ-தொய்பா, அல்கொய்தா போன்ற தீவிரவாத இயக்கங்களை ஒடுக்குவது குறித்து முதலில் பேசப்படும் என்று தெரிகிறது. அதைத்தவிர தீவிரவாதம் தொடர்பாக சாட்சியங்கள், கைரேகைகள், தகவல்கள் குறித்து பரிமாற்றம் செய்வது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படும். அமெரிக்க எப்.பி.ஐ. இயக்குனர் ராபர்ட் முல்லர், அட்டர்னி ஜெனரல் எரிக் கோஸ்வாமி ஆகியோர்களையும் சுஷில் குமார் ஷிண்டே சந்தித்து பேசுகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்