முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகொரியா மீண்டும் குறுகியதூர ஏவுகணை சோதனை

ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013      உலகம்
Image Unavailable

 

சியோல்,மே.20 - வடகொரியா மீண்டும் குறுகிய தூர ஏவுகணை சோதனையை நடத்தியது. கடந்த 2 நாட்களில் 4 ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளதாக சியோல் நகர அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கொரியா தீபகற்பத்தில் போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில் வடகொரியா நாடானது அடிக்கடி ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் நேற்று 4-வது முறையாக குறுகிய தூர ஏவுகணை சோதனையை அந்த நாடு நடத்தியதாக தென்கொரியா தலைநகர் சியோலில் உள்ள ஒரு அதிகாரி தெரிவித்தார். ஜப்பானையொட்டி கிழக்கு கடல் பகுதியில் நேற்று பிற்பகல் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தென்கொரியாவின் ராணுவ அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வடகொரியா-தென்கொரியா இடையே போர் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ள இந்த நேரத்தில் கடந்த சனிக்கிழமை மட்டும் வடகொரியா நாடானது 3 ஏவுகணை சோதனையை நடத்தியதாக அந்த அதிகாரி கூறியுள்ளார். இது போர் பயிற்சியின் ஒரு நடவடிக்கையாகும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார். 

தென்கொரியா மற்றும் அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன்னில் அணுஆயுத தாக்குதலை வடகொரியா நடத்தலாம் என்று கருதி அமெரிக்க-தென்கொரியா நாடுகளின் படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வடகொரியா ஒரு சின்ன நாடு என்று கருதாமல் அந்த நாட்டின் அணு ஆயுத தாக்குதலை தடுத்து நிறுத்தவும் அமெரிக்கா யூக்தி வகுத்து படைகளையும் போர் கப்பல்களையும் தயார்நிலையில் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருவதற்கு தென்கொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனை கொரியா தீபகற்பத்தில் பதட்டத்தை ஏற்படுத்தும் என்றும் தென்கொரியா தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்