முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய-சீன உறவை மேம்படுத்த புதிய அத்தியாயம்

ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, மே. 20  - சீனாவுடனான உறவை மேம்படுத்த ஒரு புதிய அத்தியாயத்துடன் செயல்பட இந்தியா தயாராக இருப்பதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். சமீபத்தில், இந்திய லடாக் எல்லையில் சீனா அத்துமீறி கூடாரங்கள் அமைத்ததை அடுத்து, இரு நாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டது. பின்னர் பேச்சுவார்த்தையின் மூலம் அது முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் நேற்று சீனாப்பிரதமர் லீ கெகியாங் இந்தியா வந்தார். 

இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறுகையில், 

இரு நாடுகளிடையே பல்வேறு பிரச்சினைகளில் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. இருந்தும் அவைகளில் நாம் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும். மேலும் சீனாவுடன் உறவை மேம்படுத்த ஒரு புதிய அத்தியாயத்துடன் நடந்து கொள்ள இந்தியா தயாரக இருக்கிறது என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்