முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இம்ரான்கான் கட்சியை சேர்ந்த பெண் அரசியல்வாதி கொலை

ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், மே. 20 - முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-்-இன்சாப் கட்சியை சேர்ந்த மூத்த பெண் அரசியல்வாதி ஒருவர்அடையாளம் தெரியாத நபரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். 

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தேர்தலில் போட்டியிடுவதற்காக ாபாகிஸ்தான் தெஹ்ரிக்-்-இன்சாப்  என்ற புதிய கட்சி ஒன்றினை தொடங்கினார். அதன் மூத்த பெண் அரசியல்வாதியான சாரா சாஹித் ஹுசைன் என்ற பெண்மணி நேற்றிரவு அடையாளம் தெரியாத நபரால் துப்பாக்கியால் சுடப்பட்டார். இதில், அவர் கொல்லப்பட்டார். வீட்டருகே வைத்து, சாரா சாஹித்தை மோட்டார் சைக்கிளில் வந்து சுட்டவர் யார் என்பது குறித்து இதுவரை அடையாளம் காணப்படவில்லை. கொலைக்கான காரணமும் அறியப்படவில்லை. 

ஆனால், கட்சித்தலைவர் இம்ரான் கான் எம்.க்யூ.எம் கட்சியைச் சேர்ந்த கான் ஹூசைன் தான் இந்த கொலையின் பின்னணியில் உள்ளார் என குற்றம் சாட்டியுள்ளார். இம்ரான்கானின், இக்குற்றச்சாட்டினை கான் கட்சியினர் மறுத்துள்ளனர். கடந்த வாரம் தான் பாகிஸ்தானில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு நவாஸ் ஷெரீப்பின் கட்சி ஆட்சியை கைப்பற்றிய நிலையில் இந்த கொலையின் மூலம் பாகிஸ்தான் அரசியலில் புதிய குழப்பம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago