முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் மீண்டும் ஏவுகணை சோதனை

சனிக்கிழமை, 30 ஏப்ரல் 2011      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத், ஏப்.- 30 - பாகிஸ்தான் நேற்று மீண்டும் அணு ஆயுத ஏவுகணை சோதனையை நடத்தியது. அக்னி, திரிசூல், பிரம்மோஸ் உள்ளிட்ட பல்வேறு ஏவுகணைகளை தயாரித்து சோதனை செய்து இந்தியா வெற்றி கண்டுள்ளது. இந்தியா ஏவுகணை தொழில்நுட்பத்தில் வேகமாக வளர்ந்து வருவதை  பார்த்து பாகிஸ்தானும் தனது ஏவுகணை தொழில் நுட்பத்தை வளர்க்க போட்டி போடுகிறது. ஏற்கனவே பல ஏவுகணை  சோதனைகளை நடத்தியுள்ளது பாகிஸ்தான். கடந்த வாரம் ஒரு ஏவுகணையை சோதித்த பாகிஸ்தான், நேற்று மீண்டும் ஒரு ஏவுகணையை சோதித்து பார்த்துள்ளது.
ஹடாப் 8 என்ற இந்த ஏவுகணை அணு ஆயுதங்களை தாங்கிச்சென்று எதிரிகளின் இலக்கை தாக்கும் திறன் கொண்டது என்றும் இது 350 கி.மீ.தூரம் பறந்து சென்று தாக்கும் என்றும் இது நிலத்திலும் நீரிலும் பயன்படுத்தப்படும் என்றும் இது தங்கள் நாட்டிற்கு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஏவுகணையாக இருக்கும் என்றும் பாகிஸ்தான் ஏவுகணை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஏவுகணை விண்ணில் இருந்தும் ஏவப்படும் திறன் கொண்டது என்றும் இந்த ஏவுகணை சோதனை பகிரங்கமாக நடத்தப்படவில்லை என்றும், ஆனால் இந்த   சோதனை  வெற்றிகரமாக நடத்தப்பட்டதாகவும் விஞ்ஞானிகள்தெரிவித்தனர்
ஏவுகணை தொழில்நுட்பத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது என்றும்  இந்த ரக ஏவுகணை கடந்த 2007 ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நடத்தப்பட்டது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்