முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுடெல்லியில் ஆப்கானிஸ்தான் அதிபர்

திங்கட்கிழமை, 20 மே 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, மே.21 - ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய் இன்று இந்தியா வருகிறார். ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய் 3 நாள் சுற்றுப்பயணமாக இன்று இந்தியா வருகிறார். இந்த பயணத்தின்போது அவர் இந்தியாவிடம் இருந்து ராணுவ உதவி கோருவார் என்று கர்சாயின் உதவியாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் பதட்டமான சூழல் நிலவி வரும் வேளையில் கர்சாய் இந்தியா வருகிறார். ஆப்கானிஸ்தான் ராணுவத்தை பலப்படுத்த அவர் இந்தியாவின் உதவியை நாடவிருக்கிறார். கர்சாயின் இந்திய பயணம் பாகிஸ்தானுக்கு எரிச்சலாக இருக்கக்கூடும். ஏனென்றால் அவர் பாகிஸ்தானின் முக்கிய எதிரியான இந்தியாவிடம் உதவி கோரி வருகிறார்.

ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் இருநாட்டு படைகளும் துப்பாக்கிச்சூடு நடத்தி ஒருவர் மீது ஒருவர் பலி போட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த பதட்டமான சூழலில் தான் ராணுவ உதவி கோரி கர்சாய் இந்தியா வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்