முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற தேர்தல்: பா.ஜ. மூத்த தலைவர்கள் விவாதம்

செவ்வாய்க்கிழமை, 21 மே 2013      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,மே.22 - பாராளுமன்ற தேர்தலில் கடைப்பிடிக்க வேண்டிய யுக்திமுறை குறித்து பாரதிய ஜனதா மூத்த தலைவர்கள் நேற்று விவாதித்தனர். இந்த கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்துகொண்டனர். நடப்பு பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைகிறது. இதனையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தல் யுக்தி குறித்து ஆய்வு செய்து வருகின்றன. பாரதிய ஜனதா தலைவர்களும் நேற்று டெல்லியில் கூடி பாராளுமன்ற தேர்தலில் கடைப்பிடிக்க வேண்டிய யுக்தி குறித்து விவாதித்தனர். பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடியும் கலந்துகொண்டார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசானது கடந்த 9 ஆண்டுகால ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்துவிட்டது குறித்தும் பல்வேறு ஊழல் குறித்தும் தேர்தல் பிரசாரத்தின்போது மக்களிடத்தில் எடுத்துரைக்க முடிவு செய்யப்பட்டது. மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி பொறுப்பை ஏற்று இன்றுடன் 9 ஆண்டுகள் முடிவடைகிறது. அதேநாளில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்திருப்பதை மக்களுக்கு எடுத்துக்கூற பாரதிய ஜனதா நாடு முழுவதும் வரும் திங்கள் முதல் ஒருவார போராட்டத்தை அறிவித்துள்ளது. வரும் லோக்சபை தேர்தலின்போது பாரதிய ஜனதா சார்பாக மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று கட்சியில் ஒரு சில தலைவர்கள் கூறி வருவது நாட்டின் உள்ள இளைஞர்களிடையே ஓர் ஆர்வத்தை உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் 9 ஆண்டுகால ஆட்சி குறித்து விரிவான முறையில் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது இந்த அரசு அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்திருப்பது தெரியவந்துள்ளது. விலைவாசியை குறைக்கு அரசு தவறிவிட்டது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாதுகாப்பு விஷயத்திலும் பொருளாதாரத்தை வளர்ச்சி அடைய செய்வதிலும் இந்த அரசு தோல்வி அடைந்துவிட்டது இதை கண்டித்து வரும் 27-ம் தேதி முதல் ஜூன் 2-ம் தேதி வரை பாரதிய ஜனதா சார்பாக சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த கட்சியின் பாராளுமன்ற குழு செயலாளர் அனந்த குமார் தெரிவித்தார். இந்தாண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் மத்தியப்பிரதேசம், சட்டீஷ்கர், டெல்லி, ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. வருகின்ற ஜூன் 7-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை கோவாவில் நடைபெறவிருக்கும் கட்சியின் தேசிய நிர்வாகக்குழு கூட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது என்றும் அனந்த குமார் மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்