முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் பயங்கர சூறாவளி: 51 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 21 மே 2013      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், மே. 22 - அமெரிக்காவில் 200 மைல் வேகத்தில் வீசிய பெரும் சூறாவளியில் சிக்கி பள்ளிக் குழந்தைகள் உள்பட 51 பேர் பலியாகினர். அமெரிக்கா ஓக்லஹோமா மாகாணத்தின் புறநகர் பகுதி மூரேவ். இங்கு சுமார் 55,000 மக்கள் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இப்பகுதியில் 200 மைல் (320 கிலோமீட்டர்) வேகத்தில் வீசிய மிகப்பெரும் சூறாவளியில் பலத்த சேதம் ஏற்பட்டது . சுமார் ஒரு கிலோ மீட்டர் அகலமுடைய இந்த சூறாவளிக்கு வீடுகள், பள்ளிகள் என பல இடங்கள் சூறையாடப்பட்டன, தீப்பிடித்து எரிந்தன. இதில் பள்ளி குழந்தைகள் உள்பட 51 பேர் பலியாகியதாக தெரிய வந்துள்ளது. சூறாவளியால் தூக்கி வீசப்பட்ட பொருட்களுக்குள் சிக்கியிருந்த பள்ளி மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். மேலும், இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட 120 க்கும் அதிகமானனோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்தோரில், 70 க்கும் மேற்பட்ட குழந்தைகஉம் அடக்கம். இவர்களில் பலருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள 16 மாவட்டங்களுக்கு உடனடியாக அவசரநிலை உதவிகள் வழங்க ஓக்லஹோமா கவர்னர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்