முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கான் அதிபர் ஹமீது கர்சாய்க்கு கவுரவ டாக்டர் பட்டம்

செவ்வாய்க்கிழமை, 21 மே 2013      இந்தியா
Image Unavailable

 

பக்வாரா, மே. 22 - இந்தியா வந்துள்ள ஆப்கான் அதிபர் ஹமீது கர்சாய்க்கு கெளரவ டாக்டர் பட்டம் கொடுத்து கவுரவப்படுத்தினார் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி. 

மூன்று நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தானின் அதிபர் ஹமீது கர்சாய் ஆப்கான் ராணுவத்தை மேலும் வலிமை படுத்த இச்சுற்றுப்பயணத்தின் வாயிலாக இந்தியாவின் உதவிகளை நாடுவார் என எதிர் பார்க்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் அவருக்கு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லவ்லி ப்ரொபெசனல் பல்கலைக்கழகத்தில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்தார். 

இந்நிகழ்ச்சியில் பஞ்சாப் முதல் அமைச்சர் பிராகாஷ் சிங் பாதல் கலந்து கொண்டார். கவுரவ டாக்டர் பட்டத்தைப் பெற்றுக் கொண்ட கர்சாய், மதிப்பிற்குரிய இந்த பெரிய பல்கலைக்கழகம் வழங்கும் கெளரவ டாக்டர் பட்டத்தை மிகவும் மரியாதையுடனும் அடக்கத்துடனும் ஏற்றுக்கொள்கிறேன் என்று மனம் நெகிழ்ந்தார். ஆப்கானிஸ்தான் மேம்பாட்டிற்கு இந்தியா வழங்கிய 200 கோடி டாலர் உதவிக்காக நன்றிகளை அப்போது அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago