முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கையின் தோழியை பலாத்காரம் செய்தவருக்கு சிறை

செவ்வாய்க்கிழமை, 21 மே 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, மே.22 - தங்கையின் தோழியான 21 வயது இளம்பெண்ணை நயவஞ்சமாக வீட்டுக்கு அழைத்து பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் இம்ரான் உசேனுக்கு  டெல்லி கோர்ட்டு 7 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்புக் கூறியது.

டெல்லி சாணக்யா பகுதியைச் சேர்ந்தவர் இளைஞர் உசேன். இவரது தங்கையின் தோழியை திருமணம் செய்துகொள்ள விரும்பினார். ஆனால் அந்த இளம் பெண் இதற்கு உடன்படவில்லை. எனவே தனது காமப் பசியைத் தீர்த்துக்கொள்ள சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்த அவர் சந்தர்ப்பத்தை பயன்படுத்தினார். அதன் விளைவாக அவர்  இப்போது சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்.  இந்த வழக்கில் நான் நிரபராதி. நான் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை. என்னை திருமணம் செய்துகொள்ள

அந்த பெண் விரும்பினார். நான் இதற்கு மறுப்பு தெரிவித்தேன். இதனால் வெறுப்படைந்த அந்த பெண் என் மீது அபாண்டமாக இந்த குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்று கோர்ட்டில் உசேன் கூறினார். இந்த வழக்கை விசாரித்து நீதிபதி வீரேந்திர பட் அளித்த தீர்ப்பு வருமாறு:

இந்த சமுதாயத்தில் சுயமரியாதை உள்ள எந்த பெண்ணும் உசேன்  கூறியபடி பொய்யான குற்றச்சாட்டை கூற மாட்டார். கலாச்சாரம் மிகுந்த இந்திய சமூகத்தில், எந்த ஒரு பெண்ணும் பாலியல் குற்றச்சாட்டை கூறமாட்டார். மேலும் இதுபற்றி அவர் பொய்யயான குற்றச்சாட்டை கூறினால் அவருக்கு தகுந்த வரன் (கல்யாண மாப்பிளை) கிடைக்க மாட்டார் என்பது அவருக்குத் தெரியும். எனவே அவர் வேண்டுமென்றே இப்படி பொய்யான குற்றச்சாட்டை கூறமாட்டார்.

எனவே திருமணமாகாத இந்த பெண் இதுபோன்ற குற்றச்சாட்டை கூற மாட்டார். ஏனென்றால் என்னை அவர் பாலியல் பலாத்காரம் செய்தார் என்று அவர் கூசாமல் பொய் சொல்ல மாட்டார். அப்படிக் கூறினால்  இது அவரது எதிர்கால வாழ்க்கையை வெகுவாகப் பாதிக்கும் என்பது அவருக்கு நன்கு தெரியும். எனவே இந்த மாதிரியான பொய் புகாருக்கு இடமில்லை. உசேன் கூறிய குற்றச்சாட்டை ஏற்க இயலாது. எனவே உசேனுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கிறேன். 

 திருமணமாகாத இந்த பெண் உசேனது தங்கையின் தோழி ஆவார். இவரை திருமணம் செய்துகொள்ள உசேன் விரும்பினார். அதை அவர் ஏற்கவில்லை என்பதுதான்  உண்மை. உசேன் தனது காமப்பசிக்கு இந்த பெண்ணை இரையாக்குவதற்காக, எனது தங்கை உன்னை எங்கள் வீட்டுக்கு வரச்சொன்னாள் என்று பொய் சொல்லி அந்த பெண்ணை சாமர்த்தியமாக தனது வீட்டுக்கு வரவழைத்துள்ளார். அப்போது அவரது தங்கை வெளியே சென்றிருந்ததால் வீட்டுக்கு வந்த பெண்ணை அறைக்குள் தள்ளி அவளது வாயைக்  கட்டி, அவளை பலவந்தமாகத் தாக்கி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது அவர் மது குடிக்கவில்லை. சுயபுத்தியுடன் இருந்துள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த சம்பவம் நடந்துள்ளது.

  உசேன் எனக்கு எஸ்.எம்.எஸ்.அனுப்பி என்னை திருமணம் செய்துகொள் என்று கூறியுள்ளார். அதற்கு அந்த பெண் மறுத்துள்ளார். அந்த பெண் வேண்டுமென்றே பொய்யான குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்று உசேனின் வழக்கறிஞர் கூறியதை நீதிபதி ஏற்கவில்லை. உசேன் தரப்பு கூறுவதை நம்பமுடியாது. அதை ஏற்றுக்கொள்ளவும் முடியாது. உண்மையிலேயே அந்த பெண் உசேனை விரும்பினால் அவரை காதலித்திருப்பார். இதுபோன்ற பொய்யான காரணத்துடன் கோர்ட்டுக்கு வந்திருக்க மாட்டார். எனவே உசேனுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கிறேன் என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்