முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திரத்தில் ஊழல் மந்திரிகளை டிஸ்மிஸ் செய்ய மனு

செவ்வாய்க்கிழமை, 21 மே 2013      இந்தியா
Image Unavailable

 

நகரி,மே.22 - ஆந்திராவில் ஊழல் மந்திரிகளை டிஸ்மிஸ் செய்யவேண்டும் என்று ஜனாதிபதியிடம் சந்திரபாபு நாயுடு மனு கொடுத்துள்ளார். சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் மேலும் சில மந்திரிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. அவர்கஅளையும் டிஸ்மிஸ் செய்யவேண்டுமென்று தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபுநாயுடு கோரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே சி.பி.ஐ குற்றப்பத்திரிகையில் இடம் பெற்ற சபிதா இந்திரா ரெட்டி , தர்மனாபிரசாத் ராவ் ஆகிய 2 மந்திரிகள் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது. 

சந்திரபாபுநாயுடு டெல்லி சென்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து இது குறித்து மனு கொடுத்தார். பின்னர் ஜனாதிபதி மாளிகை முன்பு நிருபர்களிடம் கூறியதாவது,

ஊழல் மந்திரியை முதல் மந்திரியை முதல்-மந்திரி கிரண்குமார் ரெட்டி காப்பாற்றி வருகிறார். எனவே கவர்னரே தலையிட்டு ஊழல் மந்திரிகளை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். இது குறித்து ஜனாதிபதியை சந்தித்து முறையிட்டுள்ளேன். காங்கிரசுடன் ரகசியக்கூட்டணி வைத்திருப்பதாக ஜெகன் கட்சியினர் கூறிவருகின்றனர். ஆனால் உண்மையிலே அவர்கள்தான் ஜெகனை சிறையில் இருந்து விடுவிக்க காங்கிரசுடன் பேரம் பேசிவருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். 

முன்னதாக ஊழல் மந்திரிகளை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் எனக்கோரி ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியினர் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்